பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வள்ளுவர் கண்ட அரசியல் அரண் தன்னிடம் பகைவர் போர் செய்யத் தொடங்கிய போதே, அவர்கள் அழியும்படி போர் செய்யவல்ல வீரர்களைக் கொண்ட பெருமை பெற் றிருக்க வேண்டும். பகைவர்கட்குத் தெரியாத பல சுரங்கவழி, கீழ் அறைவழி ஆகிய கள்ள வழிகளைக் கொண்டு, அரனுக்குரியவர் வெளியே போகவும் வரவும் வசதிகளைப் பெற்று இருக்கவேண்டும். பகை வர்கள் எதிர்த்தபோது, அரனுக்குரிய வீரர் அம்பினை எய்தும், சக்கரம், வேல் முதலியவற்றை வீசியெறிந் தும், சட்டியால் குத்தியும், கத்தியால் வெட்டியும் பொருதற்கு உரிய வசதிகளே அரண் பெற்றிருத்தல் இன்றியமையாதது. காளிங்கர் அரணில் அமைந்த வீரர் இயல்பைக் கூறும்போது, "பகையரசன் வெளியே இருந்து போர் தொடங்கியபோது அவர்கள் தலை சாய்ந்து ஒடும்படி அரனுக்குள் இருக்கும் வீரர் வெற்றி கொள்ளக் கல், பொறி, பாம்பு, கனல், கடிகுரங்கு, வில் பொறி, வேல் வெந்தி வட்டு, காய்ச்சிய மணல், இருப்பு உலக்கை, தூண்டில், விசைத்து எறியும் கவண் ஆகிய அமைப் புப் பெற்றிருத்தல் வேண்டும்' என்றும் கூறினர். இதனை வினயக புராணம் மருங்கு நீர்க்கிடங்கு வெள்ளிடை கானம் மலேயுற அகன்றுயர்த் துரங்கொண்டு ஒருங்குபல் பொறியும் அணிந்துபேர் இடத்தாய் உறுசிறு காப்பினல் வீரர்