பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. குடி ைம நாடும், அரனும் தன் முறையில் அமைந்திருப் பினும், குடிமக்கள் இல்லாதபோது அந் நாடும், அரனும் கன் முறையில் அமைந்திருந்தும் பயன் உருது. ஆகவே, நாட்டில் குடிமக்கள் நிறைந்து வாழ்தல் வேண்டும். அக் குடிமக்களும் வெறும் மானிட் வடிவம் தாங்கிமட்டும் இருந்து பயனில்லை. உயர்தினை என்பளுர், மக்கட் சுட்டே #3 என்று ஒல் காப் பெருமை வாய்ந்த தொல்காப்பியனுர் கூறிய மக்கள் பண்பு வாய்ந்தவராக இருத்தல் வேண்டும். நல்ல குடியில் பிறந்து, மனம், வாக்கு, காயம் ஆகிய இம்மூன்று கரணங்களின் செயல்களாகிய கினேப்பது ஒன்று, சொல்வது ஒன்று, செய்வதொன்று என இருக்காமல், கடுகிலேமை தவருது தம்முள் ஒத்து, பழிபாவங்களுக்குக் காரணமான செயல்களைச் செய்வு தற்கு அஞ்சும்மக்களே காட்டிற்குத் தேவையானவர். இப்பண்புடைய மக்கள் தமக்குக் கூறிய நிலைகளி னின்று, அறங்களிலிருந்து வழுவாது ஒழுகும்ஒழுக்கம் உடையராயத்திகழ்வர் உண்மையினின்றும் சிறிதும் விலகார்; காணமும் உடையராய் இருப்பர். இம் மூன்றும் முறையே மெய்க்கும், மொழிக்கும், மனத் திற்கும் உரிய பண்புகள். ஆதலின், மனமொழி மெய்களில் தூய்மையாக இருப்பவர் ம்ேலே கூறப் ஒழுக்கம், உண்மை, காணம் ஆகிய இம்மூன்று னின்றும் தவறமாட்டார். இம் மூன்றும் நற் குடியில் பிறந்த மக்கள் பண்புகள் என்பதை,