பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வள்ளுவர் கண்ட அரசியல் களின் காரியமாகிய உடம்பைப் பெற்று கின்று அவ்வுடம்பின் பயளை அனுபவித்தல், எல்லா இனத்த வர்க்கும் சமம் ஆதலின், பிறப்பு ஒத்து உள்ளது என்க. அவர் அவர்களின் பெருமை சிறுமைகளுக்கு உரைகல்லாக உள்ளவை அவர்அவர் செய்யும் தொழிற் பிரிவுகள் ஆதலின், அந்நிலையில் உயர் தாழ்வு கரு தலாம். ஏனெனில், பெருமைக்கும் ஏனேச் சிறுமைக் கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்' என வள்ளுவர் கூறப்போகின்ருர் அல்லவா? எனவே, குலத்தினல் பெருமையை அறிதல் ஆகாது. ஆசாரமே பெருமைக் குக் காரணம்." இந்தத்தருணத்தில் கம்பர் கூறுவதை யும் கவனியுங்கள். எக்குலத்து யாவர்க்கும் வினையி ல்ைவரும் மேன்மையும் கீழ்மையும்' என்பது அவ ரது கூற்று. உத்தியினுல் எல்லோரும் ஒக்குமென ஒண்ணுதே ' என்பது தினகர வெண்பா. செயற்கரிய செம்மையான செயல்களைச் செய்யா மல், செல்வத்தின் உயர்வு காரணமாக விலைஉயர் படுக் கை, ஆசனம் முதலியவற்றில் படுத்தும் அமர்ந்தும் இருப்பவர்கள், ஒருக்காலும் பெரியராக மாட்டார். வறுமையுற்றபோதும் செயற்கரிய செயலைச் செய்து வருபவர் வறுமையுடையார் என்று அறிவுடைப் பெருமக்களால் கருதப்படமாட்டார். இளேயான் குடிமாற காயர்ை பெருஞ் செல்வத் தைப் பெற்றிருந்தபோதும், தம் இல்லத்தில் அடிய வர்களுக்கு உண்டியும் உறையுளும் தங்து உபசரித்து மேன்மை பெற்ருர். பின்பு வறுமையுற்றபோதும் தம் செய்கையினின்றும் மாருது உபசரித்து மேன்மை