பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமை 57 ஏனேயவர் தொழுதிலர். காரணம் பெருமை என்றும் பணியும்; சிறுமை தன்னை வியந்து தருக்கும் அல்லவா? 'நாவலர் வெள்ளானே நடத்தஉப மன்னியர்போல் y ஆவலுடன் கண்டுபணிந் தார்களோ' என்ற திருத்தொண்டர் வெண்பாப்பாடலைப் படித் தால், இக்கருத்து நன்கு விளங்கும். ஆகவே, பெருமைக் குணமுடையவர் பெருமிதம் இன்றி இருப்பர். சிறு மைக்குண்முடையவர்கள் செருக்குடன் வாழ்வர். இத ல்ை குலத்தாலும் செல்வத்தாலும் பெரியராயினர் தாம், பெரியார் என்று எண்ணுதல் வேண்டா. நற்குடி பிறவா மாந்தர் இவர் என்பதை அவர் களின் செருக்குற்ற மனப்பான்மையால் எளிதில் அறியலாம். சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப” என்ற முதுமொழிக்காஞ்சி நூலால் இதனே உணர்க. ஆக்கம் பெரியார் சிறியார் இடைப்பட்ட மீச்செலவு காணின் கனிதாழ்ப-துரக்கின் மெலியது மேல்மேல் எழச்செல்லச் செல்ல வலிதன்ருே தாழும் துலேக்கு என்கிறது திே தெறிவிளக்கம். சிறியாரிடத்து மற்ருெரு குற்றமும் உண்டு. என் றும் பிறருடைய குற்றங்களேயே பிறரிடம் கூறி த்திரி வர். ஆனால், பெருமைக் குணம் நிறைந்த பெருங்குடி மக்கள் பிறருடைய குற்றத்தையும் மறைத்தே பேசு வர், பிறருடைய நற்பண்பையே எடுத்து மொழிவர்.