பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்ருண்மை 7i. தளரார் என்பதை, மணிமொழியாரும் தம் திருக் கோவையாரில் தலைப்படும் சால்பினுக்கும் தளரேன்' என்று கூறியதையும் காணலாம்; ஊழி பெயரினும் தாம் பிழையார் சான்ருேர்" என்ற கருத்தைப் புறப் பொருள் வெண்பா மாலே, 'இம்மூ வுலகில் இருள்கடியும் ஆய்கதிர்போல் அம்மூன்றும் முற்ற அறிதலால்-தம்மின் உறழி: மயங்கி உறழினும் என்றும் - பிறழா பெரியோர்வாய்ச் சொல்' என்று கூறுகி ಖ9, உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும் குடிப்பிறப்பாளர்தம் கொள்கையின் குன்ருர் இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா கொடிப்புல் கறிக்குமோ மற்று' என்று காலடியாரும், ஒற்கக்தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர் நிற்பவே கின்ற நிலையின்மேல்-வற்பத்தால் தன்மேல் நலியும் பசிபெரி தாயினும் புல்மேயா தாகும் புலி என்று பழமொழி நானூறும், ' நல்லாறு ஒழுக்கின் தலேகின்ருர் நல்கூர்ந்தும் அல்லன செய்தற் கொருப்படார்-பல்பொறிய செங்கண் புலியே ஹறப்பசித்தும் தின்ஞவாம் பைங்கண் புனத்தபைங் கூழ்” என்று நீதிநெறி விளக்கமும் கூறுதல் காண்க. இச் சான்ருண்மைக்கு அரிச்சந்திரனே எடுத்துக் காட்டாக எடுத்துக் காட்டலாம். அவனுக்கு எத் துணையோ துன்பங்களே விசுவாமித்திரர் செய்தும்,