பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வள்ளுவர் கண்ட அரசியல் அவற்ருல் அவன் தன் சால்பிலிருந்து மாறவில்லே அல்லவா? அப்படி இருந்ததால் அல்லவோ முருகேசர் முதுமொழிவெண்பா, " தொக்கிடும்பை கென சிகனுல் சூழ்ந்தும் அரிச்சந்திரன சொல் முக்கியமாக் காத்தான் முருகேசா' என்று அவனைப் பாராட்டுகிறது; எனவே, சான்ருேம் சால்பில் இருந்து சிறிதும் குறைதல் கூடாது. அப் படிக் குறைந்தால் நிலமானது உயிர் முதலாகிய பாரத் தைத் தாங்காது; ஆனால், ஏழுகடல், ஏழுமலே, ஏழு தீவு முதலியவற்றைப் பூமிதாங்கி நிற்கவில்லையோ என்ருல், நல்லோரைத் தாங்குகிருேம் என்ற மகிழ்ச்சியினல் அவை தனக்குப் பாரமாயினும் தாங்கி கிற்கிறது. ஆகவே, காடு அழியாது கிலேத்து நிற்கவேண்டுமானல், சால்புடைய இன் மக்களைப் பெற்றிருத்தல் வேண்டும் என்க.