பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வள்ளுவர் கண்ட அரசியல் கீழ்மக்கள் மேன் மக்களைக் கண்டு அவர்களைப் போலத் தாம் மேன்மையடைய வேண்டுமெனச் சிறி தும் எண்ணுர். ஆல்ை, தம்மினும் கள்வன் போன்று தாம் விரும்பியவாறு ஒழுகும் பட்டிகளைக் கண்டால், அவர்களைவிடத் தாம் இழிதொழிலில் மிகுந்தவர் என்று எண்ணி இறுமாப்பர். பட்டியாவான் கோவத் தக்க தொழில்களைச் செய்யும் சிறியவனுகிய காவல் இல்லாதவன் என்பதாம். கள்வன் போன்று தாம். விரும்பியவாறு நடப்பவன் என்ருே, வீட்டினின்றும் புறப்பட்டால் பட்டி புகுந்து பயிரை அழுக்கும் பட்டி மாடு என்ருே, வீட்டில் இருந்து, குணவழகு இல்லாத பெண்டிரை என்ருே பொருள் கொள்ளலாம். இவர் கள் செய்யும் கீழ்மைச் செயலினும் தம் கீழ்மைச் செயல் மிகுதிப்பாடு உடைத்து என்று கர்வங் கொள்வதே கீழ்மக்கள் இயல்பாகும் என்க. ஆல்ை, இங்கு ஒரு கேள்வி எழலாம். அதுவே கய வர்கள் ஆசாரமே இல்லாதவர்களா' என்பது. கய வர்களிடத்தில் காணப்படும் ஆசாரம் பெரும்பாலும் அச்சங் காரணமாகவும் சிறுபான்மை மணி, பொன், நெல் முதலிய பொருட்பேறு காரணமான ஆசையா லும் காணப்படுவதே அன்றி, இயல்பாக இவர்களிடம் அமைந்த ஒழுக்கம் அன்று. இவர்கட்கு இயல்பு மனம் போனவாறு செய்வதே ஆகும். கயவர்க்கு வரும் அச்சம் தம்மைத் தண்டித்தும், சிறை செய்தும் விடலாம் என்ற எண்ணத்தால் ஏற்படுவதாகும். சீரிய ஒழுக்கம் பூரியார்க்கு வருமோ வராது. பூரியோர்க் கில்லை சீரிய ஒழுக்கம்' என்பது கொன்றை வேந்தன் கயவர்களிடம் ஏதேனும் மறைபொருளைக் கூறிவைத்