பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயம்ை 77 தால் அதனை வெளியிடாது இரார். உடனே பலரும் அறியக் கூறிவிடுவர். அதனல் அவர்களைப் பறை என்னும் வாத்தியத்திற்கும் ஒப்பிடலாம். பறை யோசை பலரும் அறியும் அளவுக்கு ஓசை செய்கிற தல்லவா? அதாவது பறை ஒருவன் கையால் தன்னை அறிவித்த தொரு விடயத்தை இடந்தோறும் கொண்டு சென்று எல்லோருக்கும் அறிவித்தல் போல், கீழ் மக்களும் தம்மிடம் கூறப்பட்ட மறை பொருள்களைப் பல இடங்களுக்குச் சென்று எல்லோரிடத்திலும் அறி வித்து விடுவர் என்க. ஆகவே, வெளிப் பட்டால் குற்றம் விளைவிக்கக்கூடிய இரகசியங்களைக் கயவ ரிடத்தில் கூறுதல் கூடாது.

  • புயல்அமை கூந்தல் பொலந்தொடீஇ சான்ருேம்

கயவர்க் குரையார் மறை" என்று பழமொழி நானூறு அறிவுறுத்துவதைக் காண்க. அப்படிக் கூறியதல்ை அம்மறையினைக் காத்து வைக்கும் குணம் ஆற்றவர் கயவர் என்பதும், அறை பறை அனைய நீரார் கயவர் என்பதும் பெறப் படுகிறதன்ருே அருமறை காவரோ தான்' என்று கம்பர் வினவுவதையும் காண்க. ' பெருமலை காட பிறர்அறியல் ஆகா அருமறையை ஆன்ருேரே காப்பர்-அருமறையை நெஞ்சில் சிறியார்க்கு உரைத்தல் பனேயின்மேல் பஞ்சிவைத் தெஃகிவிட் டற்று' என்னும் பழமொழி கானூற்றுச் செய்யுளையும் படித் தறிதல் வேண்டும்.