பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வள்ளுவர் கண்ட அரசியல் திருவாப்பனூரில் இறைவனே அருச்சித்து வந்த அந்தணர், அவ்விறைவன் அருளால் பஞ்சகாலத்தில் மணலை அமுதாக ஆக்கித் தம்வறுமையைப் போக்கி வந்தனர். இந்த இரகசியத்தைத் தம் மனயாளிடம் கூறியதால் அது பலருக்கும் தெரிந்துவிடவே, அச்சித்து அவரைவிட்டு நீங்கியது. இந்த வரலாற் றின் முதுமொழிமேல் வைப்பு என்னும் நூல், 'மணலமுதா மாறு மனயாட்குக் கூறிப் பரனருள்தீர்மா மறையோர்” என்று கூறுகிறது. கயவர் தாம் உண்டு கழுவிய கையைக் கூட உதற மாட்டார்கள். அதற்குக் காரணம், உதறில்ை அக்கையில் ஒட்டிய நீர் எதற்கேனும் பயன் பட்டு விடும் என்று எண்ணும் இழிகுணமே என்க. அத்துணைக் கயமைக் குணத்தால் ஆன லாபமுடை யவர் கயவர் என்பதாம். எச்சில்கையால் காக்கை ஒட்டாதவன்” என்ற பழமொழியைக் காண்க. ஆனால், இப்படிப்பட்ட கயவர் கள், உம் கன்னத்தைப் புண்படுத்துவோம்" என்று முறுக்கிய கையுடன் வருப வர்க்கு ஈந்து விடுவர். கொறட ாலே அடித்து வாங்கும் வலியவர்க்குச் கொடுப்பர். மெலியவர்க்குக் கொடுக்க மாட்டார். கொறடாலே அடித்தலாவது கொடிறு போல இடுக்கிப்பிடித்து உடம்பை உடைத்தல் என் பதாம். இக்கயவர்களின் இயல்பைத் தமிழ் நூல் கள் மிக மிகப் பழித்துக் கூறுகின்றன.