பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வள்ளுவர் கண்ட அரசியல் சான்ருேர் இனத்தில் கயவர்க்கு இடமே கிடை யாது. அவர்களுக்கும் இவர்களுக்கும் பெரிதும் வேறு பாடு உண்டு. சான்றேரிடத்தில் வறுமையால் வாட்ட முற்ற ஒருவர் தம் வறுமைக் குறையை எடுத்துச் சொன்ன அளவில் அவர்கள் பொருட்டு இரக்கம் கொண்டு அவர்கட்கு எவ்வாறேனும் பயன் படுவர். அதாவது தம்மிடம் உள்ளதைக் கொடுப்பார். ஆல்ை, கயவர்களில் அவ்வளவு எளிதில் பயனே எதிர்பார்க்க இயலாது. கயவர்களிடமிருந்து பயனைப் பெற்றே திரவேண்டுமானல், கரும்பினின்று சாற் றைப்பெற எப்படி அதனைக் கசக்கிப்பிழிந்து எடுக்க வேண்டுமோ அதுபோல நன்கு நெருக்கிப் பயனேப் பெறவேண்டும்.

  • தளிர்மேலே கிற்பினும் தட்டாமல் செல்லா

உளிரேர் மாதோ கயவர்-அளிநீரார்க் கென்னனும் செய்யார் எ&னத்தானும் செய்பவே இன்னுங்கு செய்வார்ப் பெறின்' என்பது நாலடியார். கயவர்களிடம் இரக்கம் உபகா ரம், கொடை ஆகிய இக்குணங்கள் அமையமாட்டா. ஒயாப் பரிவும் உபசாரமும் கொடையும் தியார்க்கொன் ருது தினகரா’ என்று தினகரவெண்பா கூறுகிறது. தண்டிக்கின்றவர்கட்கே உதவக் கயவர் முன்வரு வர் என்பதை வருணன் நடந்துகொண்ட விதத்தில் இருந்தும் உணர்ந்து கொள்ளலாம். வழிவிடுமாறு இராமன் வருணனைக் கேட்டும் அவன் அதற்கு இணங்காதது கண்டு இராமன் தன் வில்லே வளைத்து