பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 விள்ளுவர் கண்ட அரசியல் என்று கூறுகிறது. ஆகவே, ஆத்தி குடி கூறுவது. போல் கீழ்மையை அகற்றி வாழக் கயவர் முயல் வேண்டும். & கயவர்கட்கு அடிமைப்புத்தியும் உண்டு. தங்க ளுக்கு ஏதேனும் துன்பம் வருவதாயின், அத் துன்பத் தைத் தாங்கி மானமுடையவராய் வாழச் சிறிதும் எண்ணுர், உடனே தம்மை விற்ருகிலும் உயிர் வாழி விரும்புவர். இந்த அடிமைப்புத்திக்கே ஆளாக உரிய வரே அன்றி, வேறு எதற்கும் உரியவர் அல்லர் கயவர். ஆகவே, நற்குடிமக்கள் கயவரோடு சேராது இருக்கத் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். நாட்டிலும் கயவர் வாழ்வதற்கும் இடம் இல்லாதவாறு கவனித் துக் கொள்ள வேண்டும்.