பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வள்ளுவர் கண்ட அரசியல் வறுமையானது உயர்குடிப்பிறப்பையும், சொல் லேயும் கெடுத்துவிடும். இத்தகைய வறுமையை எளிய முறையில் ஒழிப்பதற்குவழி, ஆசையை ஒழித்தலாகும். ஆசை ஒழிந்தால் வறுமை இல்லை. அல்லல் நல்குரவு அவா எனப்படுமே" என்ற குமரகுருபரர் வாக்கு இக் கருத்தை வலியுறுத்தும். சையில் பெரியதொரு நல் குரவு இல்லே' என்பது முதுமொழிக்காஞ்சி. ஆகவே, ஆசையே வறுமையாகும். அவ் வறுமையாகிய ஆசை, உயர்குடியில் உள்ளவர்க்கு இல்லாத இழி தொழில் களையும் இழிந்த சொற்களையும் உண்டாக்கும். சொல் லேக் கெடுக்கும் என்றது. மெல்லென்ற சொல்லால் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் சிறந்த பொருள்கள் உண்டாக்கச் சொல்லும் சொற்களைக் கெடுக்கும் என்பதாம். வறுமையானது குடிப் பிறப்பை அழிக்கும் என்பதை, - குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணே விடுஉம் காணணி களேயும் மாண் எழில் சிதைக்கும் பூண்முலே மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி என்னும் பாவி என்னும் மணிமேகலே அடிகளாலும் காணலாம். சொல்லேக் கெடுக்கும் என்றதோடு இல்லாமல், உடம் பையும் அதாவது வடிவழகையும் வலியையும் கெடுக் கும் இந்த வறுமை. வறுமை வந்தபோது என் னென்ன கிகழும் என்பதைப் பலநூற்களின் வாயி லாகவும் அறியலாம்.