பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வள்ளுவர் கண்ட அரசியல் உண்டாகும் துன்பமும், அவர்கள் கொடுத்தபோது வாங்குதல் துன்பமும், வாங்கிவந்த பொருளே அனு பவிக்கவேண்டிய பொருளைச் சேகரிப்பதில் ஏற்படும் துன்பமும், முதலிய பல துன்பங்கள் தினமும் வேறு வேருக வருதலின், துன்பங்கள் பல என்று கூறப்பட் டது. மேலே கூறப்பட்ட துன்பங்கள் மட்டும் இல்லை. இனிது உண்ணப்பெருத துன்பமும், தன் உறவினரைப் பாதுகாக்க இயலாத துன்பமும், டெரியோர்கட்கு உதவ இயலாத துன்பமும், வந்த விருந்தினரை உபசரிக்க முடியாத துன்பமும் பிறவும் என்க. எனவே, வறுமைத் துயர் உற்றவர், எல்லாத் துயரையும் உறுவர். செல்வம் இல்லாதவர்,

  • மெய்வலியும் செல்கிலேயும் வாழ்நாளும் தாஒழுக்கும் மெய்யா அளிக்கும் வெறுக்கை இலார்-வையத்துப் பல்கிளேயும் வாடப் பனேஅணேத்தோள் சேய்திரங்க ஒல்குயிர்த்ே தாரும் ரகு'

என்று இன்னிலே கூறுகிறது. ஏழைகள் பேச்சு ஏற்காது. அவர்கள் எவ்வளவு தான் மெய்க் நூற்களே அறிந்து சொன்னலும், அவர்கள் சொல் சோர்வுபடும். அவர்கள் கல்வியும் பயனின்றிப் போகும். அவர்கள் கூறும் சொற்களைக் கேளாமைக்குக் காரணம், கேட்டால் தாட்சண்யம் காரணமாக உதவ நேரிடுமே என்று எவரும் கேட்க மாட்டார். எனவே செல்வரும், சுற்றத்தாரும் வறுமை யாளரைக் கைவிடுவர். 'இல்லார் வாய்ச்சொல்லின் ஈயம் இன்ன" என்பது இன்னு நாற்பது. ஏழைகள் கல்வி சிர்பாடு இல்லாததாகும். திே நெறி விளக்கம்,