பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ஆராய்ச்சி உரை ) திருமணம் ஆவதற்குமுன் உள்ள நிலைக்குப் பிரமசரியம் என்று பெயர் திருமணமாகி மனைவியோடு வீட்டில் வாழும் நிலைக்குக் கிருகத்தம் என்று பெயர். வீட்டை வீட்டு மனைவியுடன் காட்டையடைந்து தவம் செய்யும் நிலைக்கு வானப்பிரத்தம் என்று பெயர்; எல்லாவற்றையும் துறந்த தனித்த நிலைக்குச் சந்நியாசம் என்று பெயர். இது வடநூல் வைப்புமுறை. இந்நான்கு திறத்தாருள், கிருகத்தனாகிய இல்வாழ்வான் ஏனைய மூன்று திறத்தாரையும் காப்பாற்ற வேண்டும் என்றே இக்குறளுக்கு உரையாசிரியர் பலரும் உரை தீட்டிவிட்டனர். தமிழர்தம் கோட்பாடு இஃதன்று; இதனினும் வேறுபட்டது. சிறிது ஆராய்வோம். ஒருகால், அயல்நாட்டிலிருந்து தென்னாட்டுள் புகுந்தனர் ஆரியர். அவர்க்கென வீடுவாசல், நிலம், நீர் முதலியன இல்லை. அதனால் ஒன்றிய குடும்பத்துடன் ஒர் ஊர்க்குள் வாழமுடியவில்லை. பிள்ளைகளை ஓரிடத்தில் ஒண்டச்செய்தனர். அவருடைய பொழுதுபோக்கு நிலைக்குப் பிரமசரியம் எனப் பேர் தந்து, பிறர் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று பிழைப்புக்கு வழியும் செய்துவைத்தனர். சிலர் மட்டும் கணவனும், மனைவியுமாக ஊர்க்குள் உதவிபெற்று ஒன்றி வாழ்ந்தனர். அந்நிலைக்குக் கிருகத்தம் என்று பெயரிட்டனர். சிலர் ஊர்க்குள் புகுந்து பிச்சையெடுத்து உண்டு, கணவனும் மனைவியுமாகக் காட்டோரங்களில் தங்கலாயினர். இவர்தம் நிலைக்கு வானப்பிரத்தம் என்பது பெயர். ஒருதுறையும் அற்ற சிலர். முற்றத் துறந்த முனிவராகித் தனித்துத் திரிந்தனர். இவர்களே சந்நியாசிகள். எனவே, ஆரியர் தம் வரலாற்று நிலைக்கு ஏற்ப வர்ணாசிரமங்களை வகுத்துக்கொண்டனர் என்பது புலப்படும். இத்தகைய நெருக்கடியான நிலை தமிழர்தம் வரலாற்றில் என்றும் ஏற்பட்டதில்லை. ஆதலின் அவர்கள் எவ்வளவு ஏழ்மையாயிருப்பினும் தம் பிள்ளைகளைத் தம்முடனேயே வைத்து வளர்த்துவந்தார்கள். அதனால், தமிழர்க்கும் பிரமசரிய நிலைக்கும் தூரம் அதிகம். ஏனைய நிலைகளையும் இவ்விதமே கொள்ளவேண்டும். ஆனால், தமிழர்க்கு வள்ளுவர் கண்ட மனையறம் 5