பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(தெளிவுரை) குடும்பப் பெண்ணுக்குரிய குணச்சிறப்புடன், கணவனது வருவாய்க்கேற்பச் செலவு செய்பவள் எவளோ அவளே நல்ல வாழ்க்கைத் துணைவியாவாள். (ஆராய்ச்சி உரை) வாழ்க்கைத் துணையாகிய மனைவிக்கு இந்தக் குறளில் இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. என்ன? ஒருவனுக்கு மனைவிதான் வாழ்க்கைத்துணையா? அவன் தாய்தந்தையர் என்ன ஆவது? அவன் உடன்பிறந்தார்கள் என்ன ஆவது? உற்றார் உறவின்முறையார் ஊரார் உலகத்தார் என்ன ஆவது? இவர்கள் எல்லாம் இருக்க நேற்றுவந்த பெண்டாட்டி வாழ்க்கைத் துணையாகி விடுவாளா? அவளுக்கு அவ்வளவு பெரியபேரா? ஆம், அவளே வாழ்க்கைத்துணை. தாய்தந்தையரோ இறுதிவரை இருப்பதில்லை. இருக்கும் போதும் அவர்களது அன்பு பல பிள்ளைகளுக்கும் பங்கிடப்படுகிறது. உடன் பிறந்தார்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவரவர்கட்கும் தனிக்குடும்பம் உண்டாகிவிட்டால், அதன் பிறகு அண்ணனாவது, தம்பியாவது அண்டை வீட்டுக்காரனே மேல். உற்றார் - உறவின் முறையார், ஊரார் - உலகத்தாரோ, வாழ்ந்தாலும் பொறுக்க மாட்டார்கள் - தாழ்ந்தாலும் மதிக்க மாட்டார்கள். நண்பரோ, மனைவியோடு ©6)]ff போய்க்கொண்டிருக்கும் போது ஏறிட்டுப் பார்க்கமாட்டேன் என்கிறார். சில சமயம் தெருவாயிற் படியோடு நிற்கவைத்துப் பேசியே வழியனுப்பி விடுகிறார். பிள்ளைகளுக்குள் பெண்பிள்ளைகளோ, அகப்பட்டவரையும் சுருட்டிக்கொண்டு அயலார் சொத்தாய்ப் போய்விடுகின்றனர். ஆண்பிள்ளைகளோ, திருமணம் செய்துவைத்துவிட்டால் அடியோடு மாறிவிடுகின்றனர். அவர்களுக்கு மனைவி என்ன - மாமனார் என்ன-மாமியார் என்ன-மைத்துனர்கள் என்ன - மைத்துணிகள் என்ன - இவர்களே நெஞ்சத்திரையில் நிழற்படம்போல ஒடிக்கொண்டிருக்கின்றனர். இப்படி ஒவ்வொன்றாகப் புடைத்துத் தூற்றிப் பார்த்தால் 36 பேரா. சுந்தர சண்முகனார்