பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கே வளத்தக்காள் என்பதற்கு வேறொரு பொருளும சொல்லலாம். அதாவது, "கணவனது செல்வமாக இருக்கத்தக்கவள் - இவளே கணவனுக்குப் பெரிய செல்வவளம்" என்ற அழகு உரைதான் அது இப்போது தீர்ப்பு வழங்குங்கள் - இத்தகையோளை வாழ்க்கைத் துணை என்று வாய்குளிர வழுத்துவதற்கு என்ன தடை? மேலும் துணை என்ற சொல்லுக்கு இணை - இரட்டை என்ற பொருளும் உண்டு என்பதும் இங்கே நினைவிருக்கட்டும்! பெண் வைத்திருப்பவர்களே மாப்பிள்ளையின் சொந்த வருமானத்தைக் கருதிப் பெண் கொடுப்பீராக! முன்னோர் சொத்தில் பிழைக்கும் தலையில்லாத முண்டங்களுக்குப் பெண் கொடாதீர்கள் என்று எச்சரிப்பது போல் "தற்கொண்டான் வளம்" என்னும் தொடர் அமைந்திருக்கின்றதல்லவா? பெண் பார்ப்பவர்களே பணத்துக்காகவும் பளபளப்புக்காகவும் பெண் கட்டாதீர்கள்! பண்புக்காகப் பெண் கட்டுவீர்களாக என்று எச்சரிப்பதுபோல் "மாண்புடையள்" என்னுந்தொடர் அமைந்திருக்கின்றதல்லவா என்ன அழகு! 2. மனைமாட்சியில்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் (பதவுரை) இல்லாள்கண் = மனைவியிடத்தில், மனைமாட்சி இல்லாயின் = மனையறத்துக்கு (குடும்பத்துக்கு) வேண்டிய சிறப்புப் பண்புகள் இல்லாமற்போனால், வாழ்க்கை = (அவளைத் துணையாகக் கொண்டு நடாத்தும் குடும்ப வாழ்க்கையானது. எனை மாட்சித்தாயினும் = வேறு எத்தகைய சிறப்பினை உடையதாக இருந்தாலும், இல் = ஒன்றும் இல்லாததாகவே கருதப்படும். (இல்லாள் = மனைவி; எனை = எந்தவிதமான) இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மன உரை) குடிக்குத்தக்க வ்ொழுக்கம் மனையாள் மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை வள்ளுவர் கண்ட மனையறம் 39