பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்ட கருத்தை வற்புறுத்துவதற்காகவும், கற்போர்க்குச் சுவை தருவதற்காகவும் கவிகள் கையாளும் கற்பனை மரபு என்பது காணக்கிடக்கும். அன்று தொட்டு இன்று மட்டும் எந்தக் கவிதான் கற்பனையைக் கையாளவில்லை. ஆனால், கற்பனையென்னும் திரைமறைவில், புராணங்கள் புளுகுகின்ற அண்டப்புளுகு, ஆகாயப் புளுகுகளையெல்லாம் அடக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை; அகற்ற வேண்டும் என்பதே. அளவு மீறின் அமிழ்தமும் இனிக்காதே; நஞ்சாகுமே! மேலும், இக்குறளுக்கு, கணவனை வணங்கும் கற்புடைய பெண், பெய்யென்று சொன்னால் பெய்யக்கூடிய ஒரு மழை இருந்தால் எவ்வளவு நன்மை பயக்குமோ அவ்வளவு நன்மையைக் குடும்பத்திற்குச் செய்வாள் என ஒரு பொருள் கூறுதலும் உண்டு. இங்ங்னம் கூறின், இல்லாத பொருளை எடுத்துக் காட்டும், "இல்பொருள் உவமையணி" உடையதாக இக்குறளைக் கொள்ளவேண்டும். இன்னும் இக்குறளுள், படுக்கையை விட்டு எழுந்தபின்பு அல்லவா தொழமுடியும் தொழுது எழுவதாகக் கூறியுள்ளமை எங்ங்னம் பொருந்தும் என ஒரு வினா எழுதல் உண்டு. உண்ண அமர்ந்தவனை நோக்கி, அழைக்க வந்தவன் "இன்னுமா உண்ணுகிறாய்" என்று கேட்கிறான். அமர்ந்தவன் சோற்றில் கூட இன்னும் கைவைக்கவில்லை. இருப்பினும், "இதோ வந்துவிட்டேன்" என இறந்த காலத்தால் கூறுகிறான். விரைவும், உறுதியும்பற்றிப் பின் செய்யப்போவதை முன் செய்ததாகக் குறிப்பிடுவது உலக இயல்புகளுள் ஒன்றன்றோ? தொழுது எழுவதையும் இங்ங்னமே கொள்ளவேண்டும். 6. தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். (பதவுரை) தன் காத்து - தன்னை ஒழுக்கம், உடை, உணவு முதலியவற்றால்) நன்கு காப்பாற்றிக் கொண்டு, தன் கொண்டான் வள்ளுவர் கண்ட மனையறம் 49