பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. (பதவுரை) தம் மக்கள் - தம்முடைய பிள்ளைகள், அறிவு உடைமை - அறிவு உடையவராய் இருத்தல், தம்மின் தம்மைக் காட்டிலும் (அஃதாவது தமக்கு இன்பமாய் இருப்பதைக் காட்டிலும்), மாநிலத்து - பெரிய நில உலகிலே, மன் - நிலைத்துள்ள, உயிர்க்கு எல்லாம் - உயிர்களுக்கு எல்லாம் (அஃதாவது அறிவுள்ள மனிதர்களுக்கெல்லாம்), இனிது - இன்பமாயிருக்கும். இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மனஉரை) தம்மக்கள் அறிவுடையாரானால், அது தம்மினும் உலகத்துயிர்கட்கெல்லாம் இனிதாம். (பரிஉரை தம் மக்களது அறிவுடைமை பெரியநிலத்துமன்னா நின்ற உயிர்கட்கெல்லாம் தம்மினும் இனிதாம். (தெளிவுரை) தம் பிள்ளைகள் அறிவுத் திறமையால் செய்யும் ஆக்கவேலைகள், தம்மை விட பெரிய உலகில் என்றும் வாழும் உயிர்கட்கெல்லாம் இனிய நன்மை பயக்கும். (ஆராய்ச்சி உரை) பிள்ளைகள் அறிவுடையராய் இருந்தால் மகிழ்ச்சி பெற்றோர்க்கு மட்டுமா? பெற்றோரைவிட, உலகத்துள்ள உயர்ந்த மனிதர்கள் மிகுதியாக மகிழ்வார்கள். எப்படி? பெற்றோர் தம் ஆயுள் வரையும், வீட்டில் மட்டும் மகிழ்வார்கள். உலகினரோ, பிள்ளைகள் இருக்கும் வரையும், இறந்த பின்னும் பல துறைகளில் மகிழ்வார்கள். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் மகிழ்வார். தொழில் செய்யும் இடத்தில் தலைவர் மகிழ்வார். அரசாங்கம் மகிழும். பயன்பெறும் ஏழைகள் மகிழ்வர். இன்னும் எல்லோர்க்கும் எப்போதும் மகிழ்ச்சியேயன்றோ? திருவள்ளுவர் முதலியோரின் அறிவு பற்றி வள்ளுவர் கண்ட மனையறம் 67