பக்கம்:வள்ளுவர் கண்ட மனையறம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகப்பனுக்கு, ஆற்றும் - செய்யவேண்டிய, உதவி - பதில் உதவி (யாதெனின்) (பிறர் தன் கல்வியறி வொழுக்கங்களைக் கண்டு இவன் தந்தை - இப்பிள்ளையின் தகப்பன், என் நோற்றான் கொல் - (இப்பிள்ளையைப் பெறுவதற்கு) என்ன தவம் செய்தானோ, எனும் சொல் - என்று பாராட்டும் புகழ்மொழியாகும். இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு : (மன உரை) மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம், இவன் தந்தை என்ன தவம் செய்தான் என்று உலகத்தார் சொல்லும் சொல்லைப் படைத்தல். (பரிஉரை) கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது, தன்னறியும் ஒழுக்கமும் கொண்டார், இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தான் கொல்லோ என்று சொல்லும் சொல்லை நிகழ்த்துதல். (தெளிவுரை) இவனைப் பெறுவதற்கு இவன் பெற்றோர் என்ன தவம் செய்தார்களோ என்று பிறர் தன் கல்வியறிவு ஒழுக்கம் முதலியன பற்றித் தன் பெற்றோரைப் புகழும்வண்ணம் ஒவ்வொரு பிள்ளையும் நடந்துகொள்ளவேண்டும். - (ஆராய்ச்சி உரை) இப்பகுதியுள் தந்தை மகளுக்குச் செய்வதென்றோ, தாய் மகனுக்குச் செய்வதென்றோ, மகள் தந்தைக்குச் செய்வதென்றோ, மகன் தாய்க்குச் செய்வதென்றோ குறிப்பிடாமல், தந்தைக்கும் மகனுக்குமே தொடர்பு காட்டியிருத்தலின், அறிவுடையவர்கள் ஆண் பிள்ளைகளே என்பது நன்கு போதரும்: ஆதலின் புதல்வர் என்பதே பொருந்தும் எனின், மொழியுதும் :அமிழ்தம் உண்டவன் வாழ்வான் என்றால், அமிழ்தம் உண்டவள் வாழ்வாள், உண்டவர் வாழ்வார், உண்டது வாழும், உண்டன வாழும் 70 பேரா. சுந்தர சண்முகனார்