உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

S& பீலியெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் . பீலி - மயிலிறகை, பெய் - ஏற்றப்பட்ட, சாகாடு - வண்டியும், அச்சிறும் - அச்சு முரிந்துவிடும், அப்பண்டம் - அம்மயிலிறகை, சால மிகுத்து - மிகவும் அதிகப்படுத்தி, பெயின் - ஏற்றிவிட்டால். (மாணவர்கள் எழுதிக்கொண்டு, படித்துக்கொண் டிருக்கிறார்கள்; மயிலையும், அது ஆடுவதையும் பார்த்துக்கொள்ளுகிறார்கள்.) ஆசிரியர் : மாணிக்கம்! இந்தக் குறட்பாவின் கருத்தினைச் சுருக்கமாகச் சொல்லு. மாணிக்கம் : பளுவில்லாமல்-மிகவும் நொய்தாக இருக் கின்ற மயிலிறகையும் அளவிற்கு மீறி ஏற்றிவிட்டால் வண்டியின் அச்சு முறியும். ஆசிரியர் : சுந்தரம்! மயிலிறகு என்பதற்குக் குறட்பாவில் வந்திருக்கும் சொல்லினைச் சொல். சுந்தரம் : பீலி” என்பது ஐயா! ஆசிரியர் : மணி! சாகாடு’ என்றால் ೯75767 பொருள்? மணி : 'சாகாடு' என்றால் வண்டி என்று பொருள் ஐயா! ஆசிரியர் : முருகேசா! அப்பண்டம்’ என்று குறட்பாவில் சொல்லப்பட்டது எந்தப் பண்டத்தைக் குறிக்கும்? முருகேசன் வண்டியில் ஏற்றப்பட்டிருக்கும் மயிலிறகு களை ஐயா! -