பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

89

மாணிக்கம் : சாகாடு’ என்று சொல்லப்பட்டிருக்கிறது ஐயா! அந்தச் சொல் எப்படி ஐயா வந்தது? ஆசிரியர் : தெரிந்துகொள்ள வேண்டியதுதான்! சகடம்’ என்றால் வண்டி என்று பெயர். அது குறட்பாவில் கூறும்போது 'சாகாடு’ என்று வந்திருக்கிறது. மாணிக்கம் : மயிலிறகு மட்டும்தான் பளு இல்லாமல் இருக்குமா ஐயா? ஆசிரியர் : அப்படியல்ல! பொதுவாக எல்லாப் பறவை களின் இறகுகளும் பளுவில்லாமல் நொய்தாகத்தான் இருக்கும். பறவைகளின் இறகுகளை எல்லாம் பீலி” என்றும் சொல்லலாம். மயிலிறகு என்பதைத்தான் "பீலி” என்று சிறப்பாகக் கூறப்படும். மாணிக்கம் : ஆ! பாவம்! விழுந்துவிட்டார் ஒர் ஆள் ! (எல்லா மாணவர்களும் மாணிக்கம் பார்த்த திசை யில் பார்த்தார்கள். ஆசிரியரும் பார்த்தார்.) ஆசிரியர் : ஆமாம், ஒர் ஆள் கீழே விழுந்துவிட்டார்! நல்ல வேளை யாரோ ஒருவர் ஓடிப்போய்த் துரக்கிவிட் டார்! ஒன்றும் அடிபடவில்லை போலிருக்கிறது! சுந்தரம் : வேட்டியில் சேறு ஒட்டிக்கொண்டது! சேற்றில் விழுந்துவிட்டார்! ஆசிரியர் : அங்கே போய்ப் பார்க்க வேண்டுமா? வாருங் கள் எல்லோரும் போவோம்! - (ஆசிரியரும் மாணவர்களும் அந்த இடத்தை நோக் கிப் போகின்றார்கள்.) மாணிக்கம் : எப்படி ஐயா! அவர் விழுந்துவிட்டார்? முருகேசன் : இதோ பார்த்தால் தெரிகிறதே! அங்கே சின்ன வாய்க்கால் ஒன்று ஒடிக்கொண்டு இருக்கிறது.