87
87
மாணவர்கள் : நன்றாகத் தெரியுமய்யா! மிகவும் இலேசா னதாக இருக்கும். காற்றில் பறக்கும். ஆசிரியர் : அதுபோல இந்த மயிலிறகும் மிகவும் இலேசா கத் தானே இருக்கின்றது? மாணவர்கள் : ஆமாம் ஐயா! ஆசிரியர் : இவ்வளவு-பளுவே இல்லாமல்-மிகமிக இலே சானதாக இருக்கின்ற மயிலிறகினைக்கூட அளவுக்கு மீறி ஒன்று சேர்த்து ஒரு வண்டியின்மீது ஏற்றிவிட்டால் வண்டி தாங்குமா? மாணிக்கம் : தாங்காது ஐயா! ஆசிரியர் : ஏன் தாங்கக்கூடாது? மயிலிறகுதான் பளுவில் லாமல் மிகவும் இலேசாக இருப்பதாயிற்றே! மாணிக்கம் : ஆமாம் ஐயா! மிகவும் எளிமையானதுஇலேசானதுதான் - ஆனால் அதுவும் மிக அதிகமாக ஒன்றாகச் சேர்த்துவிட்டால், பளுவு அதிகமாகத் தானே போகும். அளவுக்கு மீறி ஏற்றப்பட்டுவிட்டால் வண்டிகூட முறிந்துவிடுமே! ஆசிரியர் : திருவள்ளுவர் கூறுகின்ற சிறந்த நீதியை மயிலிறகின் மூலம் உங்கட்கு இப்போது தருகின்றேன். உன்னிப்பாகக் கேட்டுக்கொள்ளுங்கள். மயிலிற கை ஏற்றிக்கொண்டிருக்கின்ற வண்டியும், வண்டி சுமக் கின்ற அளவிற்குமேல் ஏற்றப்பட்டுவிட்டால் அச்சு முறிந்துவிடும்! அதாவது எந்தக் காரியத்திலும் அள வறிந்து நடந்துகொள்ள வேண்டும். அளவு மீறினால் எக்காரியமும் கெட்டுவிடும். குறட்பாவையும், பொரு ளையும் சொல்லுகின்றேன்; குறித்துக்கொள்ளுங்கள். (ஆசிரியர் சொல்லுகிறார் - மாணவர்கள் எழுதிக் கொள்ளுகின்றார்கள்.)