பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

1 2 3

வாழ்க்கையில் சிலரல்ல-பலர் தம்முடைய நிலையினைத் தாமே நொந்துகொண்டு வாழும் இழிவான பழக்கத்தினை நீக்கி இன்ப நெறியில் வாழ்வதற்கு ஆன நல்லுரைகளை - கருத்துக்களை விளக்க எண்ணியுள்ளேன். மனிதனை மடியவைப்பது - சாகவைப்பதே மடிமை என்கிற சோம்பேறிக்குணம் என்பதனை உணர்ந்துகொள் ளுங்கள். சோம்பல் என்பது வாழ்க்கையினைக் கரைத்து விடுகின்ற தீய சக்திவாய்ந்ததென்பதை என்றும் மறவா தீர்கள். தம்மால் செய்து முடிக்க முடிகின்ற செயல்களையும் செய்யாமல் இருக்கும் பலரைப் பார்க்கின்றோம். அப்படி யிருந்தும் அவர்கள் இருந்த இடத்திலேயே பேசாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன? மடி என்கிற சோம்பல் குணம் அன்றி வேறு எது வாக இருக்க முடியும்? ஒருவனை மற்றவனுக்கு அடிமை ஆக்கிவிடுகின்ற குணமே மடியென்பது ஆகும். சுறுசுறுப்பும் - முயற்சியும் - ஊக்கமும் மறைந்துபோயிருக்கின்ற நிலைதான் சோம் பேறித்தனம் என்பதாகும். மனிதனாகப் பிறந்தவன் சொந்த முயற்சியால் - சிந்த னையால் பல நல்ல செயல்களைச் சிந்தித்து ஆற்றக்கடமைப் பட்டிருக்கிறான். அவைகள் அத்தனையும் அவனுடைய வாழ்க்கையினை மிகுதியும் மேம்படுத்திவிடும். இவை யனைத்தையும் மறைத்துக்கொண்டு - கெடுத்துக்கொண்டு இருக்கின்ற குணமேதான் மடிமை என்பதாகும். சோம்பேறி என்பவன் பிறர் சொல்வதைக்கேட்டு-பிறர் கட்டளைக்குக் கீழாகி நடக்கவேண்டிய நிலையில் வைக்கப் பட்டுவிடுகிறான். ஆதலால்தான் மடிமைக்குணம் என்பது அடிமையினைப் புகுத்திவிடும் என்று கூற ஆசைப்படுகிறேன்.