125
夏25
சொல்லுவது யார்க்கும் எளிய காரியம் என்பதை நீங் களும் அறிந்து இருக்கிறீர்கள். சொல்லிய நல்வழிகள் அத் தனையும் செயலில் இருப்பதில்லை என்பதற்குக் காரணம் யாது என்பதனை நன்கு ஆராய்ந்து பார்க்கும் முறைகள் பெரும்பாலும் மக்களிடத்தில் இல்லை யென்றே கூறுவேன். சொல்லியவண்ணம் செய்தல் அரிது என்பது உலக வழக்கு ஆகும். நீர் நிறைந்த தடாகம் ஊரில் இருந்தும் குளித்துத் தூய்மைப் படுத்திக்கொள்ளாத மக்கள் இருப் பார்களேயானால் அதற்கு என்ன காரணம்? நீர்மூழ்கித் தாய்மைப் படுத்திக்கொள்ளாமைக்குச் சோம்பல்தானே காரணம்? அதுவே போன்று ஊக்கம், முயற்சி என்கிற வற்றாத பொய்கைகள் நம்மிடத்தே இருக்கின்றன. அவைகளைப் பயன்படுத்திக்கொள்ளாத குறை நம்மிடம்தானே இருக் கின்றது? பன்முறையும் சிந்தித்துப் பாருங்கள். உடையர் எனப்படுவது ஊக்கம் என்கின்ற நற்பெரும் பண்பாடான நல்வழியினைப் பழகிக்கொள்ள முயற்சி செய்யுங்கள். வறுமைக்கும் துன்பத்திற்கும் காரணம் ஊக்கம் இல்லா ததுதான். ஊக்கம் இல்லாத மக்கள் உலகில் சிறப்பும், புகழும், நற்பெயரும் பெறுதல் முடியாததாகும். ஊக்கமே எல்லாவற்றிற்கும் அடிப்படையாகும். உள்ளம் (மனம்) இருக்கின்றவர்களென்றால் ஊக்கமுடையவர்களாக இருக் கின்றார்கள் என்றே பொருள். உள்ளம் என்பதற்கே ஊக்கம் என்றுதான் அர்த்தம். இக்குறட்பாவினை நாள்தோறும் எண்ணிப்பார்த்து உயர் வடைவீர்களாக. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு. உள்ளம் - ஊக்கம், இல்லாதவர் - இல்லாதவர்கள்,