பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

l 26 உலகத்து - உலகத்தாருள், வள்ளியம் - வண்மையுடையேம் (ஈகைக்குணம் உடையேம்) என்னும் - என்கிற, செருக்கு - தம்மைத்தாமே மதித்தலை, எய்தார் - அடையப்பெறமாட்டார்கள். இதனை மிகமிகச் சிறந்த மெய்ப்பொருள் என்று எண்ணி வாழும் மக்கள் அரிதாகிவிட்டார்களே! ஒவ்வொரு மணி நேரமும் 'நாம் என்ன நற்காரியத்தை எண்ணி னோம்; செய்தோம்’ என்று கணக்கிட்டுப் பார்க்க வேண் டாமா? விண்பொழுதுதானே கழித்துவிட்டோம் என்று நினைக்கும்பொழுது நடுங்கித் துடிக்கவேண்டுமே! கையில் ஒரு ரூபாய் வைத்திருந்த ஒருவன் எப்படிச் செலவாயிற்று என்று எண்ணிப் பார்க்கிறானல்லவா? எங்கேயோ மறந்து தவற விட்டுவிட்டோம் என்று எண்ணும் பொழுது உள்ளம் துடிக்கின்றானல்லவா? அப்படியிருக்க, அருமையான இந்த மக்கள் பிறவியில் ஒவ்வொரு நாளும் விலைமதிக்க முடியாத காலமல்லவா? உழைத்துப் பயன்டையாமல்-காலத்தை நன்முறையில் செலவிடாமல் கழிப்பதனால்தான் வறுமையும், துன்பமும், கவலையும் நம்மைக் கவ்விக்கொள்ளுகின்றன. செல்வாக்கு -செல்வம் வழிதேடிக்கொண்டு வரும்படியான வாய்ப் பினை ஊக்கம் என்பது உண்டாக்கித் தரும் என்னும் பெரிய உண்மையினைக் கடைப்பிடித்து நடப்பீர்களாக, ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை . அசைவு - தளர்ச்சி என்பது, இலா - இல்லாமல், ஊக்கம் - ஊக்கத்தினை,