உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

127

உடையான் - உடைய ஒருவன், உழை - இருக்கும் இடத்திற்கு, ஆக்கம் - செல்வமானது, அதர்வினாய் - தானே வழி கேட்டுக்கொண்டு, செல்லும் - போய்ச் சேரும். பொன்னான இன்னுரை இது! இதனை உலக அறிஞர் கள் வாழ்க்கையில் காணமுடியும். மனிதனைக் கொல்லக் கூடிய நஞ்சு போன்றவைகளில் பயனில்லாத பேச்சுப் பழக்க மும் ஒன்று என்பதை நீங்கள் மறக்கவே கூடாது. இப்பழக் கத்தினைக் கடிந்து ஒதுக்குங்கள். காலத்தைக் கொள்ளை கொள்ளும் தீய பழக்கம், பயனில்லாத பேச்சுக்களைப் பல மணி நேரம் பேசிப் பழகு தலேயாகும். நல்ல மக்கள் கூட இந்தப் பழக்கத்திற்கு இரை யாகி இருக்கின்றனர். பயனற்ற பேச்சுக்கள் பேசுபவர் களை மக்கள் என்றே கூறாதீர்கள். நெல்லில் பதர் இருப் பதுபோல பயனில்லாதவைகளைப் பேசும் மக்களைப் பதர் கள் என்றே நினைத்தல் வேண்டும். பயனில்சொல் பாராட்டு வானை மகன் எனல் மக்கள் பதடி எனல். பயன் - நற்பயன், இல் - இல்லாத, சொல் - சொற்களை, பாராட்டுவானை - பாராட்டிப் பன்முறை பேசு ՅԱ T 68) 6ճI , மகன் எனல் - மனிதன் என்று கூறாதே, மக்கள் - மக்களுக்குள்ளே, பதடி - பதர், எனல் - என்று கூறுவாயாக.