128
128 அப்படிப்பட்ட வர்கள் மக்களுக்குள்ளே ப த ர் க ள் போன்றவர்களாகின்றார்கள். பாதையில் நடந்து செல்ப வனைப் பார்த்து ' எங்கே போகின்றாய்?’ என்று கேட் டால், அவன் ஒரு குறிப்பிட்ட காரணத்தைக் கூறுகின்றான். அப்படிக்கின்றி எங்கே என்று எனக்கே தெரிய வில்லை - போய்க்கொண்டே இருக்கின்றேன்’ என்று கூறுவானேயானால் அவனை என்னவென்று கூறுவது? அவனைப் பின்பற்றித்தான் யாராவது செல்ல விரும்பு வார்களா? அதுவேபோன்று, சிலர் ஏதாவது பேசிக்கொண்டிருந் தால், நாமும் பேசிக்கொண்டிருந்தால் இவ்வாறு பேசிக் கொண்டிருப்பதால் நமது வாழ்க்கைக்கு யாது பயன்?’’ என்று எண்ணிப் பார்த்தல் வேண்டும். ஒன்றுமே நமக்குப் பயனில்லை : காலம்தான் போகிறது’’ என்று தோன்றுமேயானால், உண்ணக்கூடிய பயனுள்ள உணவினை ஆற்றில் எறிந்துவிடுவதற்கு ஒப்பான கொடிய செயலாகும் அது என்று உணர்தல் வேண்டும். சொல்லில் பயனுடைய சொல்லுக’ என்ற உயர்ந்த முறை யினை மேற்கொண்டு நடப்பீர்களாக, இன்றேல் மக்கள் அனைவரும் கீழ்நோக்கிச் செல்லும் வாழ்க்கையைத் தான் அடையமுடியும். கவலை தானே தழுவும்; வறுமை வந்தே தீரும்; நாடு துன்பமுற்று உழலும்; ஆட்சிக்கும் கெடுதல் ஏற்படும். நம்மை நாமே உயர்த்திச் செல்வாக்குப்பெற்று இன்பத்தில் சிறந்து வாழும் நல்வழிகளைப் பின்னும் தொடர்ந்து பேசு கிறேன். ー★ー