129
I 29
உலக வாழ்க்கையினை மேற்கொண்டுள்ள மக்கள் அனைவருமே இல்லறப் பண்பாட்டில் இருந்து வாழ்தலே சிறந்த முறையென்பது உலக அறிஞர்களுக்கு ஒப்பியதொரு கருத்தாகும். . வாழ்க்கையில், வாழ்கின்ற முறையில் வாழ்வானே யானால், அடைகின்ற பேரின்பம் வந்தே தீரும். இல்லற இன்பத்தில் வாழ்ந்துய்யும் நன்முறைகளை அறியாதார் மதிமயங்கிய வாழ்க்கையில் சிதறுண்டுத் தவிக்கின்றனர் என்பதை அறிய வருந்துகின்றேன். - இயற்கை உலக நெறியினில் அறமான பாதையில் வாழ்க்கை நடத்தும் இல்லறத் தலைவன் பிறவாழ்க்கை களில் ஈடுபட்ட அனைவரையும்விடச் சிறந்தவனாகவே போற்றப்படுபவனாகின்றான். ஒர் அரிய குறட்பா உங்கள் நினைவில் இருப்பதாகுக. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை . இ ல் வாழ்க் கை - இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டு, . இயல்பினான் - இயல்பாகவே பொருத்தமான தன்மை களுடன், வாழ்பவன் - வாழுகின்றவன், என்பான் - என்பவன், . முயல்வாருள்-ஆசைகளை அறுத்து வாழ முயலுகின்ற முனிவர்கள், - . எல்லாம் - எல்லோரையும் விட, தலை - மிக்கவனாவான். 9