உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

13 (? இல்லற வாழ்க்கையின் பெருமை மேலோங்கிய தன்மை யில் எண்ணிப் பாராட்டப்படுவ தொன்றாகும். இல்வாழ்க் கையினை நன்முறையில் நடத்தமுடியாத அறிவிலிகள் துறவறத்தினை மேற்கொள்ளுவதாக எண்ணி மனைவி மக்களைவிட்டு வெளியேறுகிற பழக்கமும் உலகில் காணப் படுவதொன்றாகத் தான் இருக்கின்றது. பேதைகள் இவ் வாறு பேசித் திரிகின்றனர் என்றே கூறவேண்டும். இல்லறத்தை மேற்கொண்டிருப்பவர்கள் இருக்கவேண் டிய பண்பாட்டுடனும், நெறியுடனும் இருப்பார்களே யானால் அவர்களையே தெய்வங்கள் என்று கூறக் கூடிய இடத்தில் வைத்துப் போற்றுதல் வேண்டும். இஃது உண்மையுமாகும். தெய்வக் கூட்டங்கள் பெருமையுடன் பேசக்கூடியன என்னும் சிறப்பினை அந்த வானவர் உலகம் சொல்லிக் கொண்டிருக்கின்ற சிறப்பிற்கு இந்த உலக இல்லற வாழ்க்கை மக்களே உரியவர்களாவார்கள். வானுறையும் தெய்வங்கட்குத்தான் சிறப்பென்று மக்கள் பேசுவார்களேயானால் இந்த உலக - இம்மக்களும் அதைப்போன்ற பெருமை உடையவர்களே யாகின்றார்கள் என்று அறிவீர்களாக. ஆதலால் இந்த உலக இல்வாழ்க்கை தான் சிறந்ததெனப் போற்றுங்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். வாழ்வாங்கு - வாழ வேண்டிய முறையில், வையத்துள் - இவ்வுலகில், வாழ்பவன் - வாழ்கின்ற இல்லறத் தான், வான் - வானுலகில், உறையும் - வசிக்கின்ற,