பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

136 விடுமானால் அவன் பிச்சைக்காரனாகத்தான் மாறியாக வேண்டும்? தரித்திரத்தில் ஆழ அமுக்கப்பட்டிருப்பவன், கொலை பாதகம் போன்ற, மானம் விட்டு யாசிக்கும் தொழிலை மேற்கொள்ளாமல் இருக்க ஆசைகளை முற் றிலுமே துறந்துவிட (விட்டுவிட) வேண்டும் என்கிறார். அதற்குத்தான் "துவரத்துறத்தல்' (துவர-முற்றிலும்) என்று அமைக்கின்றார். இதனால் வறுமையின் கொடும்ை யில் அவன் தப்பித்துக்கொண்டு, யாசிக்கும் தொழிலையும் நீக்கி தன்மானத்தையும் காத்து ஆசை விட்டவனாகிவிடு கின்றான் என்பது குறிப்பாக கூறப்பட்டது. அவ்வாறு பிழைக்க யாதொரு மார்க்கமும் இன்றி, ஆசைகளை விட்டுத் துறவியாகவும் மாறாமல் இருக்கும் ஒருவன் யமனாக மாறிவிடுவான் என்று ஆசிரியர் கூறும்பொழுதுதான் நகைச்சுவையின் நயம் நமது உள்ளத்தைக் கவர்ந்து விடு கிறது. . ஆசிரியர் மேற்சொன்ன முறையினைக் கையாளாத தரித்திரம் கொண்டவன் ஆகாரத்திற்கு என்ன செய்வான்? அக்கம் பக்கம் வீடுகளில்தான் பிச்சையெடுக்க வேண்டும். அவனுக்கோ வேறு வழியில்லை. ஆசைகளை விட்டுத் துறவியாக இருப்போம் என்ற எண்ணமும் கொள்ளமாட் டேன் என்கின்றான். பிறகு தன்னை வாட்டும் பசிக்கு என்ன செய்வான்? நீராகாரம்' என்று சொல்லுகிறோமே, அதையாவது அல்லது புளித்துப்போன காடியிலாவது கொஞ்சம் உப்புப் போட்டுக் குடிக்கக் கேட்டுத்தானே தீர வேண்டும். அவனைத் தான் ஆசிரியர், 'உப்பிற்கும் காடிக்கும் கூற்று' (கூற்று - யமன்) என்று கூறிவிடுகிறார்? வறுமையாளன் யாசிக்கும் பொழுது காடித் தண்ணீரில் உப்பைப் போட் டாவது குடிக்கக் கேட்க வேண்டியிருக்கும் என்று யாசிக்கும் தொழிலின் கீழ்மையினை ஒருமாதிரி நகைச்சுவை தோன்ற அமைத்தார். குறட்பா: