பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

1.37

துப் புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. துப்புரவு இல்லார் - அனுபவிக்கும் உணவு முதலாகிய எதுவுமே யில்லாத தரித்திரக்காரர், துவரத்துறவாமை - முற்றிலும் ஆசையினை விட்ட துறவறத்தை மேற்கொள்ளாமல் இருப்பது. உப்பிற்கும் காடிக்கும் - அடுத்த வீட்டிலிருக்கும் உப்புக்கும், புளித்த காடிக்கும், கூற்று - யமனாவான். பசுவுக்கு நீர் மிகமிகப் பழங்காலந்தொட்டு இன்று முதல் பசுமாடு களை உயர்ந்த பெருமையுடன்தான் போற்றி வருகின் றோம். தெய்வீகத்தன்மையோடிசைந்த அவ்வளவு சிறப் பினைப் பசுக்களுக்குத் தந்து கொண்டாடுகிறோம் என்று கூறுவதும் மிகையாகாது. அவ்வாறு உயர்த்திப் பேசுவ தற்கும் தக்க காரணங்கள் இல்லாமலில்லை. ஆவின்பால் நமது உயிரைப் பாதுகாப்பது என்பதில் யாரும் ஐயப்பட இடமேயில்லை. எத்தனையோ குழந் தைகள் பசுவின் (ஆவின்) பாலைக்கொண்டு உயிர் பிழைத்து வருகின்றன என்பதை நாம் கண்கூடாகக் கண்டு வரு கிறோம், 'ஆ' என்ற எழுத்திற்கே பசு' என்று பொருள். ஒரு எழுத்து ஒரு சொல்லாக இருப்பது உண்டு என்ற தமிழ் மொழிப் பெருமையில் இதுவும் ஒன்று. - பழந்தமிழ் நூல்கள் பலவற்றிலும் பசுக்களை எவ்வாறு போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள் என்பதைச் சிறிதளவு தெரிந்துகொண்டாலும் அவைகளை நாம் எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது வெளிப்படையாகத் தெரியும். பொருளாதார முறையிலும் வாழ்க்கை முன்