உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

138 னேற்றத்திலும் பசுவின் பெரும் உதவி எங்கனம் பயன் படுதல் உண்டு என்பதும் உலக உண்மையே யாகும். சுருக்கமாகக் கூறும் பொழுது நம்மை வளர்த்து, உடலுறுதி தந்து உயிரையும் வளமாக்கி வருவது பசுதான் என்ற கருத்தினை யாரும் மறுக்கவே முடியாது என்னலாம். அந்த முறையில் வைத்து எண்ணப்பட வேண்டிய ஆவினை (பசுவினை) ஒரு குறட்பாவினைப் பயன்படுத்தி அரியதோர் செய்தியினை ஆசிரியர் வள்ளுவனார் நமக்கு அமைத்துக் காட்டுகின்றார். முயற்சி செய்து சம்பாதித்து வாழ்வோம்’ என்கிற கருத்தினைப் போன்ற மந்திரம் ஆசிரியரின் அழுத்தமான உள்ளக்கிடக்கை என்பதைப் பலமுறையிலும் விளக்குகின் றார். தான், மனம், மொழி, மெய்களால் முயற்சி செய்து சாப்பிடுபவனைத் தான் ஆசிரியர் மக்கள் கூட்டத்தில் சேர்த்து எண்ணப்பட வேண்டியவன் என்கிறார். தன்னு டைய முயற்சியால் சம்பாதித்து ஒருவன் சாப்பிடுவது கூழாக இருந்தாலும் அது தேவாமிர்தத்திற்குச் சமம் என்றே கூறுதல் வேண்டும். பெரும் இன்பத்தைக் கொடுப்பதும் அதுவேதான். இவ்வளவையும், இன்னும் இதுபோன்ற பலகருத்துக் களையும் ஆசிரியர் கூறுவதன் நோக்கம் அடிப்படையில் முக்கியமானதொன்று இருக்கச் செய்கிறது. அதுதான், ஒருவன் முயற்சி செய்தலை விட்டுப் பிறரைக் கேட்டு அல்லது யாசித்து பிழைத்தல் என்னும் பழக்கத்தை அறவே மறக்க வேண்டும் அல்லது ஒழிக்க வேண்டும் என்பதாகும், உலகில் கேவலமாகக் கருதக்கூடிய இழிசெயல்கள் பல GYI Tr35 உண்டு. அந்தக் கேவலமான செய்கைகளுக்கெல்லாம் கேவலமானது பிறரைத் தாழ்மையாகக் கேட்டு ஒன்றினை வாங்கி அல்லது யாசகமாகப் பெற்று வாழும் வாழ்க்கை யாகும்.