பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

£39

இந்தச் செயலினை இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே நமது ஆசிரியர் வன்மையாகக் கண்டித்து எழுதி உள்ளதை உன்னி உன்னிப்பார்க்கத் தமிழன் வாழ்ந்த வாழ்க்கையின் சீரிய நிலை புலனாகாமல் போகாது. இவ் வாறு பிறரைக் கேட்டு வாழ்பவர்களிடத்தில் ஒரு தனிப் பட்ட கிளை வழியாக ஒன்றினைக் கூறுகின்றார். யாசகம் என்றால், தான் வாழ்வதற்குத் தானே வாங்கக்கூடாது என்று எண்னும் ஒருவன், பிறருக்கு என்று போய்க் கேட்டு வாங்குவோமே என்று நினைப்பானே யாகில் அதுவும் கேவலமே யாகும் என்பது ஆசிரியரின் கோட்பாடு. இந்த நாக்கு, பிறரைப் பார்த்து, எனக்கு ஒன்று கொடு?’ என்று கேட்டுவிட்டாலே போதும். அதைவிட இழிவு வேறு ஒன்றுமே யில்லை என்று அப் பழக்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறார். உதாரணமாக ஆசிரியர் பேசுவதைப் பார்ப்போம். பசுவின் பெருமையினைப் பற்றியும், நாம் எவ்வாறு அதனைப் போற்ற வேண்டும் என்பதைப்பற்றி யெல்லாம் கொஞ்சம் விவரமாகவே மேலே கண்டோம். அப்படிப் பட்ட பசுவினை (ஆவினை) ஒருவன் ஒருவழியில் பார்க் கின்றான் என்று வைத்துக்கொள்வோம். சரியான வெய் யில் நேரம், பசுவினைப் பார்க்கும் அவன், அப்பசுவோ தண்ணிரின்றி மிகவும் தவிக்கின்றது என்று அறிந்து கொள்ளுகின்றான். அவன் மனம் பசுவினைக் கண்டு துடிக்கின்றது. எப்படியாவது தண்ணிர் அந்தப் பசுவிற்குக் கொடுத் தாக வேண்டும் என்று எண்ணுகின்றான். அவன் எண் ணமும் மிகவும் பாராட்ட வேண்டியதுதான். ஏனெனில் பசுவினைத் தனது உயிர்போல் காக்க வேண்டும் என் பதையும் அவன் அறிந்தவனே. உடனே அவன் என்ன செய்ய வேண்டும்? #