140
罩40 எங்கேயாவது போய், நீர் இருக்கும் குளமோ, குட் டையோ தேடி நீர் கொண்டுவந்து கொடுக்க வேண்டும். அப்படி அவன் ஒன்றும் செய்யவில்லை, அங்கிருந்த ஒரு வீட்டிற்குச் செல்லுகின்றான். கொஞ்சம் நீர் கொடுங்கள் என்று கேட்கின்றான். ஆவிற்கு நீர்' என்ற சொற் களினால் ஆசிரியர் இக்கருத்தினை அமைக்கின்றார். தன்னால் முயன்று கொண்டுவரும் எண்ணம் இன்றி கேட் பதினாலே அதுவும் யாசிப்பதை (இரத்தலை) யே ஒக்கும் என்கிறார் ஆசிரியர். (இரத்தல் - யாசித்தல்) ஆனால் ஒரு சமாதானம் சொல்ல முயற்சிக்கலாம். தனக்கு இன்றி பசுவுக்கு வேண்டித்தானே இரக்கின்றான் (யாசிக்கின்றான்) என்று பேசலாம். அது எப்படி இருந் தாலும் அதைப்பற்றி அக்கரையில்லை என்கிறார் ஆசிரியர். அவன் நாவில் பிறரைப்பார்த்து கொடு’ என்கிற வார்த்தை வந்து விட்டதல்லவா? அதுவே கேவலத்தைக் கொடுத்து விடுகிறது. இரவு' (யாசித்துக்கேட்டல்) என்பதைப் போன்ற இளிவு’’ (கேவலம்) இந்த நாவிற்கு வேறு எதுவுமே யில்லை. ஒப்புயர்வற்ற உயர்ந்த வாழ்க்கை என்பதுதான் முயன்று செய்தலே யாகும் என்னும் ஆழ்ந்த உண்மையினை நாம் நன்கு தெரிந்து வைத்தல் வேண்டும் என்பதே இதன் குறிப்பு. இரவின் இளி வந்தது இல்’’ இரப்பதை (யாசிப்பதை)ப் போன்றதொரு கேவலம், இந்த நாவிற்கு வேறு எதுவுமே யில்லை என்று மெய்ப்பித்து விட்டார். அரியவற்றுள் எல்லாம் மிக அருமையான இக்கருத்தினைச் சுலபமாகக் கூறிவிடுகிறது. இக்குறட்பா: ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல்.