பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

l 41

ஆவிற்கு - தண்ணிர் இல்லாமல் இறக்கும் நிலையிலி ருக்கும் பசுவுக்கு, நீர் என்று - தண்ணிர் கொடுங்கள்' என்று, இரப்பினும் - பிறரை யாசித்தாலும், நாவிற்கு - நாவினுக்கு, இரவின் - யாசிப்பதைப் போன்ற தொரு, இளிவந்தது - கேவலத்தைத் தருவது, இல் - வேறு எதுவுமே யில்லையாம். பிறப்பு ஒழுக்கம் ஆசிரியர் வள்ளுவனாரின் குறட்பாக்களைப் படித் துணரும் வகைகள் பலவாக இருந்து வருகின்றன. எனினும் அத்தனைக்கும் குறட்பாக்கள் இடந்தருவனவாக இருக் கின்றன என்று ஒரு சிலர் கூறினாலும் அக்கூற்றுப் பொருந் தாத ஒன்றாகும். ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட கருத்தினைத் தான் ஒரே பொருளாக மனதில் எண்ணி எழுதியுள்ளாரே யன்றி நினைப்பவர்களுக்கு நினைத்தபடி யெல்லாம் பொருள்தர எழுதினார் என்று கூறுவது ஆசிரியரின் சிறப் பினை மேம்படுத்துவது ஆகவே ஆகாது. உண்மையும் அதுவல்ல என்று துணிந்து கூறலாம். மேற்கூறிய பலவகைகள் என்பதில், ஆசிரியர் குறட் பாக்களை அப்படியே வைத்து அதற்குரிய பொருளை நம் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஏற்றபடி கண்டு கொள்ளுவதும் ஒருவழி. அதுவே சிறந்த வழியும்கூட என்று சொல்லுதல் வேண்டும். - - அப்படிக்கின்றி வள்ளுவனார்க்குச் சற்றேறக்குறைய ஆயிரம் வருடங்களுக்குப் பின்பு எழுதப்பட்ட உரையினைக் கொண்டு, குறட்பாக்களை ஊன்றிப்படித்து வள்ளுவனார் உள்ளக்கருத்தினை நன்கு அறியும் ஊக்கத்தை விட்டு, உரை எழுதியவர், வள்ளுவனார் எண்ணியதையேதான். அப்