உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

142 படியே சொல்லுகிறார் என்று முடிவுகட்டிக் குறட்பாக் களைத் தெரிந்து கொண்டதாக நினைத்தலும் மற்றொரு பழக்கமாக இருக்கின்றது. கூடியவரையிலும் ஆராய்ந்தறிதல் என்கிற நுணுக்கங் களுக்குப் போதல் அதிகம் விரிவாகும் என்பதை நினைத்தே நாம் பொதுப்பட கருத்துக்களைப் பார்த்துக்கொண்டு போகின்றோம். திருக்குறளை ஏன் எழுதினார்? எழுதிய காலம் எப்படி யிருந்தது? திருக்குறள் என்பது ஒரு - வெறும் நீதிநூல் மட்டும்தானோ? வள்ளுவர் அப்படியாக சில கருத்துகளை யும் புலப்படுத்தவும் இந்நூலினை எழுதித் தந்தாரா? இப்படியான பல கேள்விகளை உண்டாக்கிக்கொண்டு ஆசிரியர் வள்ளுவனாரை அறிந்துகொள்ள முற்படுதல் மிகவும் போற்றக்கூடியது. இத்துறையில் இங்கு அதிகம் எழுதவேண்டிய அவசியம் இல்லையென்று தோன்றுகிறபடியால் இப்பகுதியால் 'பார்ப்பான்...... கெடும்’ என்று கூறவந்த ஆசிரியரின் உள்ளக் கருத்தினை உய்த்துணர முற்படுவோம். ஒழுக்கம் என்பதே மனிதனுக்கு உயிர். உயிருக்கும் மேலானது என்பது ஆசிரியரின் கோட்பாடு. பார்ப்பான் என்கிற சொல்லினை பிறிதோர் இடத்தில் ஆசிரியர் குறிக்கும் பொழுது மற்றவர்களை ஏமாற்றவேண்டிய அவர்கள் சோர்ந்திருக்கும் நேரத்தைப் பார்த்துக் கொண் டிருக்கும் ஒருவனைச் சுட்டிக்காட்டி, பார்ப்பவன் என்ற பொருளில் சந்தேகமற கூறிவைக்கின்றார். அக்கருத்தினை இங்கு, இந்தக் குறட்பாவில் பார்க் கின்ற பார்ப்பான் என்கிற சொல்லின் உரைக்குச் சான்றாக நாம் எடுத்துக் கூறாவிட்டாலும், பொதுப்பட பார்ப் பான்' என்ற சொல்லிற்குப் பார்ப்பவன் என்கிற பொரு ளன்றி வேறுமாதிரியில் திரித்துக்கூறும் எப்பொருளும் பொருந்தவே பொருந்தாது. அங்ங்ணம் பொருள் செய்ய