பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

143

முனைவோர் வள்ளுவனார் கருத்திற்கு மிக மிக எட்டிப் போகின்றவர்கள் ஆவார்கள். ஒரு வகையில் இது முரட் டுத் தனமான அர்த்தமும் கூட. ஒழுக்கம் என்பதை எவ்வளவு இன்றியமையாத பண்பா டென்று கூறவேண்டுமோ, அவ்வளவு அழுத்தம் திருத்த மாகக் கூறிவிடுகின்றார். அப்படிப்பட்ட ஒழுக்கத்தின் சிறப்யினை விளக்க வந்த இடத்தில் நூல் படித்தல் அல்லது பழைய முறைப்படி வேதம் ஒதுதல் என்கிற ஒரு பழக்கத் தினை எடுத்துக் கொள்ளுகிறார். ஒதுதல், என்கிற சொல்லிற்கு நூல்களைப் படித்தல் என்றே பொருள். வேதம் என்று குறித்துக் கூறினும் கொள் ளத்தக்கதேயாகும். ஒத்து’’ என்கிற சொல் வேதத் தினைக் குறிப்பதாகவே கொள்ளுவோம். வடமொழி யாளர் கொள்கையினை ஆசிரியர் பல இடங்களில் கண்டிக் கின்றார் என்பதை ஆசிரியரின் உள்ளப் பண்பாட்டினை அறிந்துள்ள உரையாசிரியர்கள் பலரும் (பரிமேலழகர் உள் பட) எடுத்துக்காட்ட தயங்குகின்றாரில்லை, அங்ங்ணம் இருக்க, வேதம் ஒதும் பார்ப்பானைப் பார்த்து நீ ஒதுகிற ஒத்தினை’’ (வேதத்தினை) மறந்து விட்டால்கூட பரவாயில்லை. பிறகு படித்துக் கொள்ள லாம். அதனை ஒதிவிட்டால் மட்டும் போதும் என்று இருக்காதே. உனக்கு வேண்டியதெல்லாம் மனிதன் மனித சமுதாயத்தில் பலருடன் ஒத்துப்போய் சமமாக, ஒழுக்கத் துடன் வாழுதலே வேண்டும். அப்படியில்லாவிட்டால் உன்னுடைய ஒத்தும் (நூல்களும்) நீயும் கெட்டு மண் ணாய்ப் போக வேண்டியதுதான் என்று ஆசிரியர் கூறு கிறார். - - . . . . ; இவ்வுயரிய மொழிகளைப் பன்முறையும் உன்னிப் பார்க்கவேண்டும். பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் என்று அறைந்தாற்போல் கூறுகின்றார். பிறப்பு ஒழுக்கம் என்பது மக்களோடு சமத்துவமாக ஒன்றுபட்டு வாழ்தல் என்று சுருக்கமாகக் கூறுவோம். * . . . ; : . ."