69
69
(ஆசிரியர் கூறியதை மாணவர்கள் கேட்டுக்கொண்டே, ஆசிரியரைப் பின் தொடர்ந்து தாமரைக் குளத்திற்குச் சென்றனர்.) ஆசிரியர் : (மாணவர்களைப் பார்த்து) அ ப் படி யே எல்லோரும் உட்கார்ந்துகொண்டு குளத்தைப் பார்த் துக்கொண்டிருங்கள். பலவகை நீர்ப்பூக்கள் அழகாகத் தெரிகின்றனவா? வேலன் : குளத்தில் நிறைய நீர் இருக்கின்றது ஐயா! எத் தனையோ வகையான பூக்கள் பல வண்ணங்களில் இருக்கின்றன; இது மிகவும் ஆழமான குளம்போல இருக்கின்றதய்யா! ஆசிரியர் : ஆமாம்! மிகவும் ஆழமான குளம்தான் ! தண்ணீரும் நிறைய இருக்கின்றது. யாரும் குளத்தில் இறங்கிவிடக் கூடாது என்று காவல் போட்டிருக்கி றார்களே ! சுந்தரம் : அதோ! காவற்காரர்கூட வருகின்றார்! இந்த மலர்கள் எல்லாம் தண்ணிருக்கு மேலே அழகாகத் தெரிகின்றன! மாணிக்கம் : தண்ணிருக்கு மேலேதான் தெரியும்! தண்ணி ருக்கு உள்ளேயா மலர்கள் இருக்கும்! ஆசிரியர்: சரி! இப்போது உங்களை ஒரு கேள்வி கேட்கப் போகின்றேன். சரியான விடை சொல்ல வேண்டும். மலர்களை இப்போது பார்க்கிறீர்களே - இவற்றின் அடியில் கொடிகள் இருக்குமல்லவா ? தண்ணிர் குறைந்து விட்டால் இந்த மலர்கள் எங்கே இருக்கும்? மாணிக்கம் : அப்போதும் தண்ணிரின் மேல்தான் இந்த மலர்கள் இருக்கும் - கொடிகளும் தண்ணிருக்குள்ளே தான் இருக்கும் ஐயா!