பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

83

லுங்கள். சுந்தரம் சொல்லட்டும்! நாம் எல்லா வேலை களையும் செய்ய நமக்கு மிகவும் உதவியாக இருப்பவை எவை? - சுந்தரம் : நமது கைகள்தான் ஐயா. ஆசிரியர் : சரியான விடை! நம்முடைய உடம்பில் இருக் கும் நமது கைகள் எவ்வளவு உதவி செய்கின்றனவோ அதுபோல உதவி செய்பவர்கள்தாம் நண்பர்கள். ஆசிரியர் திருவள்ளுவர் நமது கைகளைக் காட்டித்தான் நண்பர்களின் பெருமையினைக் கூறுகின்றார். நாம் இடுப்பில் உடுத்திக்கொண்டிருக்கிறோமே உடை அது அவிழ்ந்துவிட்டால் என்ன செய்கின்றோம்? (எல்லோரும் சேர்ந்து சொல்லுகிறார்கள்: உடனே கட்டிக்கொள்ளுகிறோம் ஐயா!) ஆசிரியர் : அவிழ்ந்த உடையைக் கட்டுவது எது? மணி : கைகள் தான் ஐயா! கட்டுகின்றன. ஆசிரியர் : மெதுவாகப் போய்க் கட்டுகின்றனவா? வேக மாகப் போய்க் கட்டிவிடுகின்றனவா? மாணிக்கம் : உடனே கட்டிவிடுகின்றன ஐயா! அவிழ்ந்து விழுவதற்கு முன்பாகவே அதிவிரைவில் சென்று கட்டி விடுகின்றன. சில நேரங்களில் கைகள் கட்டுவதுகூட நமக்குத் தெரியாமல் அவ்வளவு விரைவில் கைகள் செய்துவிடுகின்றன ! - ஆசிரியர் : மாணிக்கம் மிகவும் நன்றாக விளக்கம் செய்து விட்டான்ே! அப்படித்தான் நண்பர்களும் உதவி செய்ய வேண்டும். இடுப்பில் உடுத்திக்கொண்டிருக்கிற ஆடை தான் நம் மானத்தைக் காப்பாற்றுகின்றது. ஆதலால் தான் அந்த ஆடை அவிழ்ந்து விழாதபடி கைகள் உடனே போய்ப் பிடித்து இறுக்கமாகக் கட்டிவிடுகின் றன. உடுத்திக் கொள்ளுகிறோமே அதற்கு என்ன