பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

84 என்று பெயர்? யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள்! (மாணவர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக்கொள்ளு கின்றனர். ஆசிரியர் தொடர்ந்து சொல்லுகின்றார்.) உடுத்திக்கொள்ளுகின்ற ஆடைக்குத்தான் உடுக்கை' என்று பெயர். இப்போது குறட்பாவினைச் சொல்லு கின்றேன். எழுதிக்கொள்ளுங்கள். உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக் கண் களைவதாம் நட்பு. நட்பு - நட்பாவது, உடுக்கை - இடுப்பிலிருக்கும் ஆடையானது, இழந்தவன் - குலைந்து அவிழ்ந்தவனுக்கு, கைபோல - கை சென்று உதவுவதைப்போல, ஆங்கே - அப்பொழுதே, இடுக்கண் - துன்பத்தினை, களைவதாம் - நீக்குவதேயாகும். (மாணவர்கள் எழுதிக்கொண்டு படிக்கின்றார்கள்.) நண்பர்களைப் பற்றியும் சொல்லும்படிக் கேட்டீர்கள். இந்தக் குறள் நன்றாகப் புரிந்திருக்குமே! முருகேசன் : மிகவும் நன்றாகப் புரிந்திருக்கின்றது ஐயா! (சிறிதுநேரம் ஏதோ நினைக்கின்றான்.) ஏதோ ஒர் ஒச்ை வருகின்றது ஐயா! மாணவர்கள் ; (எல்லோரும்) என்னவோபோல அந்த ஓசை இருக்கிறது ஐயா! ஆசிரியர் : ஒகோ! அதுவா! நீங்கள் கேட்டதில்லையா? அதுதான் மயில்கள் அகவும் ஒசை. மயில்கள் அப்படித் தான் ஒசையிடும். கேட்பதற்கு நன்றாக இருக்காது