பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 உண்மையாகும். ஆதலால் பெண்கள் கொள்ள வேண்டிய காணம் பல இடங்களிலும் பல நிகழ்ச்சி களிலும் குறிப்பாக இருத்தல் வேண்டும். அவ்வாறு ஆண்களுக்கு இருத்தல் கூடாது. ஆண்களுக்கு காணம் இருத்தல் வேண்டுமென்று கூற வந்த ஆசிரியர் கருமத்தால் நானுதல் நாணம்’ என்பதாகக் குறட்பாவில் குறித்தார். செயல் புரிகின்ற பொழுது பழிப்புக்கு ஆளாகும் செயலாக இருந்து. விடுமோ என்ற அச்சம் இருத்தல் வேண்டும். இந்த அச்சத்தினை நல்ல முறையில் உண்டாக்குவது காணம் என்கின்ற உயர்ந்த பண்பாகும். - பெண்கள்-நாணம் ஆதலால்தான் கருமத்தினால் அதாவது செயல் செய்வதில் காணத்தினை மேற்கொள்ள வேண்டு மென்று கூறுகிறார். கருமத்தால் என்ற சொல்லினைக் கொண்டே குறட்பா தொடங்கப் பெறுகின்றது. ஆண் களில் பலர் பெண்மைத் தன்மை கொண்டவர்கள் போல வாழ்க்கையில் எல்லாவற்றிலுமே காணம் கொண்டவர் களாகக் காணப்படுவார்கள். அத்தன்மை தவறானது என்பதை வற்புறுத்த வேண்டியே கருமத்தால் காணுதல்’ என்று குறிப்பாக வைத்தார். பிறவற்றில் நாணம் கொள்வார்களேயானால் அது பெண்மைத் தன்மை போன்றதாகும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியே திருதுதல் கல்லவர் நானுப் பிற என்று குறட்பாவினை முடித்தார். அழகிய கெற்றியினையுடையவர்கள் எனபதை திருநுதல்’ என்பதும் அத்தன்மையையுடைய நல்ல குல மகளிர் என்பதை கல்லவர்” என்ற சொல்லும் தெளிவுபடுத்தின.