பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நல்வினைப் பயனால் நமக்குக் கிடைத்த விலைமதிப்பில்லா கோமேதகமன்றோ ! அப்பாஅவர்களுடைய-வள்ளுவர் நெறி வாழ்க்கையைக் கொண்டே - மாண்புமிகு முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள், திருக்குறள் நெறிபரப்பு மையம் ஒன்றை உருவாக்கி, அதையும் வள்ளுவர் கோட்டத்திலேயே அமைத்து, சீரோடும் சிறப்போடும் நடை போட வைத் துப் பெருமைப்படுத்தியுள்ளார். இது காலத்தால் பாராட்டும் ஒரு பெரும் பேறல்லவா! - எளிமை தோய திருக்குறள் நெறியோடு தம் குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, அந்த வாழ்க்கையைப் போல் 'மற்றவர்களும் வாழ வகை செய்துள்ளார். அவர் தொண்டு மக்களின் நல்வாழ்வை மலரச் செய்கிறது. வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை’ என்னும் இந்நூல், ஒவ்வொருவரும் எப்படி வாழ வேண்டும் என்னும் அறிவியல் வழியைக் காண்பிக்கும் சிறந்த நூல். இந்த நூல் தமிழ்மக்கள் விரும்பிப் படித்துப் பயன் பெற்று வாழ்வில் உயருமளவிற்கு உருவாகியுள்ளது. உலகிற்குப் பொதுமறை ஒரு திருக்குறள் போல, தமிழகத்திற்கு ஒரு திருக்குறளார் விளங்குகிறார்கள். அவர்களுடைய அனைத்து நூல்களும் மக்கள் மத்தியில் பெருவாரியாக உலாவர வேண்டும் என்பதே என் அவா! நன்றி, வணக்கம்! அன்புடன், - மூவேந்தர் முத்து