பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை நல்லறிவும் புல்லறிவும் & 4 . . - றிவுடையார் எல்லாம் உடையார்” என்பது மனிதப் பிறவிக்கே பொருந்தியதாகும். மனிதன் பெற்றிருக்கும் சிறப்பான செல்வம் அறிவுச் செல்வமே யாகும். நல்லறிவு பெற்றிருக்கும் ஒருவன் எல்லா இன் பத்தினையும் தடையின்றிப் பெறுவான். எலலா இன்பங்களும் அவனிடம் வந்து சேரும்; செல்வத்தைச் சேர்ப்பதற்கும் அதைப் பாதுகாப் பதற்கும் அவனாலேயே முடியும். எல்லாச் செல்வமும் அவனிடம் உண்டு என்பதற்காகவே எல்லாம். உடையார் என்று கூறப்பட்டது. - அறிவினை, நல்லறிவு-புல்லறிவு என்று பாகு படுத்திக் கூறலாம். புல்லறிவு உடையவன் வாழ்க்கை' யினைத் தீமையாக்கிக் கொள்ளுவான். அறிவு பெறாத வனிடத்தில் உலகத்தார் கூறும் ஏனைய பலவகையான செல்வங்கள் இருந்தாலும் அவை அவனுக்குப் பயன் தராமலேயே போகும். , -