பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - அறிவினைப் பெற்று அதனை கன்கு பயன்படுத்தி வாழாதவன் மனிதப் பிறவியில் தாழ்ந்தவனாகவே கருதப்படுவான். பேதைகள் என்றும், புல்லறிவாளர்கள் என்றும், கயவர்கள் என்றும் இன்னும் இவ்வாறான பல பெயர் களால் அறிவில்லாதவர்கள் குறிக்கப்படுவார்கள். கல்லறிவு பெறாத மக்கள் கிறைந்த நாடு முன் னேற்றமடைதல் முடியாததாகும். அறிவில்லாதவர்கள் வேறு பல வகையான செல்வங்களைப் பெற்றிருந்தும்; அவற்றை கல்ல முறையில் நுகர முடியாது. ஆன படியால் அவர்களை வறிஞர்கள்’ என்று கூறுவது மிகையாகாது. - - அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று தொடங்கப்பெற்ற குறட்பா, அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்” என்று முடிகின்றது. இருந்தும் நுகர முடியாதவர்களானபடியால் இலர்’ என்றே கூறப் LIL-L – GUTT s - மக்களால் மதிக்கப் பெற்ற பெரிய செல்வங்கள் என்று கூறப்பட்டாலும் பயனின்றியேதான் முடியும் என்பதைச் சுடடிக் காட்ட என்னுடையரேனும் இலர்’ என்பதாக வலியுறுத்தப்பட்டது. அறிவு வளரக் கூடியது; வளர்க்கப்பட வேண்டி யது; கிலைத்து நிற்பது; அழிவில்லாதது. எனவேதான் எல்லாம்” என்ற சிறப்புச் சொல்லும் கூறப்பட்டது. அறிவுள்ளவனே தன்னைத்தான் உயர்த்திப் பலருக்கும் பயன்படுவான். . . . . . - - - நல்லறிவினைக் கெடுத்துப் புல்லறிவினைத் துணையாகக் கொண்டு வாழ்பவன் புறக்கணிக்கப்பட