பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 வேண்டியவனாவான். புல்லறிவாளன் பிறர் சொலலும் நற்கருத்துக்களையும் ஏற்கமாட்டான். தானேயும் கற்கருத்துக்களை அறிந்து கொள்ளவும் மாட்டான். :அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார், என்னுடைய ரேனும் இலர்’ என்று வழங்கும் குறட்பா வில் என்’ என்னும் சொல் சிந்திக்கத் தக்கதாகும். :அறிவார் அறிவிலார்’ என்று இருவகையில்தான் மக்கள் பிரிக்கப்படுதல் வேண்டும். - பகுத்தறிவே மனித அறிவு உலகில் அறிவிற்குக் கொடுக்கப்பட வேண்டிய இடம் வேறு எப்பொருளுக்கும் கொடுக்க முடியாத தாகும். மனித இயல்பில்-நடைமுறையில் செயற்படும் அத்தனையும் அறிவின் அடிப்படையிலேயே கடத்தல் வேண்டும். - * , உலகில் பிறந்து வாழ்கின்ற ஏனைய பிறவி களுக்கெல்லாம் மனிதன் பெற்றிருக்கின்ற அறிவு கிடையாது. பகுத்தறிவு என்றும், மனித அறிவு என்றும், ஆறாவது அறிவு என்றும் சிறப் பித்துப் பேசப்படுவதெல்லாம் கல்லறிவு"ஒன்றினையே யாகும். - அறிவில்லாதவர்கள் அடைகின்ற துன்பங்கள் மிகப் பல. அறிவில்லாத மக்களிலே புல்லறிவாளர்கள் என்பவர் ஒருவகையினராவர்; புல்லறிவாளர்களிடம் மனிதப் பண்பாடு இருக்காது. அறிவில்லாதவர்கள் தமக்குத்தாமே துன்பங்களை வலிய வரவழைத்துக் கொள்ளுவார்கள். கொடிய துன்பத்தினையும் தாமே உண்டாக்கிக் கொள்ளுவார்கள்; குற்றங்களைப் புல்லறி வினால் செய்து விடுபவர்களாவார்கள்.