பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அவர்கள் தங்களுக்குத் தாமே செய்து கொள்ளும் துன்பத்தினை கினைத்துப்பார்த்தால், அவர்களுடைய கொடிய பகைவர்கள்கூட அத்தகைய தீங்கினை அவர்களுக்குச் செய்ய முடியாது என்றே கூற வேண்டும். - ஒருவனுக்குப் பகைவன் திங்கு செய்ய வேண்டு மென்றால், அப்பகைவன் குறிப்பிட்ட ஒரு தீங்கினையே செய்வான்; அதுவும் குறிப்பிட்ட ஒரு காலத்திலேயே செய்வான். ஆனால் புல்லறிவுடையவனோ எல்லா காலத். திலேயும் எல்லாவகையான தீமைகளையும் தனக்குத் தானே செய்துகொள்ளுவான்; துன்பத்தினைத் தேடிக் கொள்ளுவான். ஒருவனைத் துன்பப்படுத்துகின்ற துன்பத்தினை, பிழிக்கும் பீழை” என்று ஆசிரியர் திருவள்ளுவர் குறித்துக் காட்டுகிறார். உலக வழக்கத்தில், ஒருவன் கன்மையைத்தான் தேடிக் கொள்ளுவான். இதுதான் இயற்கையுமாகும். ஆனால் புல்லறிவாளனோ அப்படிப்பட்டவனல்ல. கபீழிக்கும் பிழையினைத் தேடிப் பார்த்து வரவழைத் துக் கொள்ளுவான். - அப்படி அவன் வரவழைத்துக் கொள்ளும் பிழை அவனுடைய பகைவர்களாலும் செய்யவே முடியாது. என்பதைக் குறித்துக்காட்ட செறுவார்க்கும் செய்தல் அரிது’ என்று குறட்பா கூறுகின்றது. செறுவார்” என்பது கொடிய பகைவர்களைக் குறித்ததாகும். புல்லறிவாளர்களின் செயல் வியப்பிற்குரியதேயாகும். ஏனெனில், பகைவனால் செய்யமுடியாத தீங்கினையும். தாமே உண்டாக்கிக் கொள்ளுகின்றார்கள் அல்லவா?