பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 0 குணம் அவரிடத்தில் ஒர் கோயாகவே இருந்து விடுகிறது. பொதுவாக நோய் என்பது போக்கிக் கொள்வ தாகும். இவ்வுண்மையை உலக நடைமுறையில் காம் கண்கூடாகக் காண்கிறோம். ஆனால் அப்புல்லறி. வாளர் பெற்றிருக்கின்ற புல்லறிவு என்கின்ற நோய் அப்படிப்பட்டதன்று; அந்த நோய் அவர் உயிருள்ளள வும் இருந்தே தீரும். இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், இவ்வுலகில் வாழுகின்ற காலமெல்லாம் அவர் புல்லறி வாளராகவே வாழ்ந்து மறைவர். புல்லறிவு என்பது எவ்வளவு கொடுமையானது என்பதை காம் அறிந்து கொள்ள முடிகிறது. அறிவுள்ளவர்கள் கற்கருத்துகளைப் புல்லறி வாளருக்குச் சொல்லுவார்களேயானால், அதை அவர் செய்ய மாட்டார்; தானே அறிந்து தெரிந்து செயற் படுவார் என்றாலோ அப்படியும் தானாகவும் கல்லவை களை யறியமாட்டார். இந்த இரண்டும் புல்லறிவாள ரிடத்தில் நிலைத்து கிற்கும். . . . அவ்வாறு வெறுக்கக் கூ டி ய வைகளான இக்குணங்கள் உயிர் போகும் அளவும் அவரைவிட்டு நீங்காமல் இருப்பவைகளாகும். ஏவவும் செய்கலான் தான் தேரான் அவ்வுயிர் போஒம் அளவும் ஓர் கோய்' என்பதாகக் குறட்பா அமைக்கப்பட்டுள்ளது. குற்றமான குணங்களைப் புல்லறிவாளர் எவ்வளவு. பிடிவாதமாகக் கொண்டிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிய விளக்கப்பட்டது.