பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 புல்லறிவின் தனித்தன்மை உலக இயற்கை என்னவென்றால் எல்லாரும் எல்லாவற்றையும் அறிந்து தெரிந்து இருப்பார்கள் என்று கூறமுடியாது. நம்மால் முடிந்ததை நாம் அறிவோம்; காம் அறிந்திராத கருத்துகளை அறிக் திருக்கும் மற்றவர்கள் கூறக்கேட்டுத் தெளிவடை வோம். கற்பதினாலும் கேள்வியினாலும் உலக கடை முறைப் பழக்கத்தினாலும் ஒருவர் கல்லறிவை வளர்த்துக் கொள்ளுகின்றார். இவ்வுண்மை இவ்வாறிருக்கப் புல்லறிவாளன் என்பவனோ மற்றவர்கள் கூறும் எந்த நற்கருத்தையும் வாங்கிக் கொள்ளமாட்டான். தனக்கு எல்லாம் தெரிந்த துண்டு என்றே பேசுவார். அவரிடம் இருக்கும் இக்கொடிய எண்ணம் செவிச் செல்வத்தையே அவர் அடையாதபடி செய்துவிடுகின்றது. தனக்கு எல்லாம் தெரிந்திருக்கின்றது என்ற எண்ணம் அவரிடம் வளர்ந்து நிலையாக இருப்பதாகும். புல்லறிவாளருக்கு கல்லறிவைப் புகட்ட முயற்சித்தால் அது வீணானதாகவே முடியும். . புல்லறிவாளரிடம் சென்று அவர் கண்டறியாத உண்மையினை அவருக்கு ஒருவர் சொல்லப் புகுந்தால் சொல்ல வந்தவருக்கே தெரியாது என்று புல்லறிவாளர் மு. டி வு செய்து கூறுவார். காணாதார்க்குக் காட்டுவான் தான் காணான்’ என்று ஒரு குறட்பா புல்லறிவாளரைப் பற்றிக் கூறத் தொடங்குகின்றது. புல்லறிவாளருக்கு உண்மையினைக் காட்டச் சென்றவர் அவரால் பழிக்கப்பட்டுத்தான் அறியாத வராய் வர நேரிடும். கானாதான் என்று அப்புல்லறி