பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வாளரைக் குறிப்பிட்டார். புல்லறிவாளருக்கு உண்மை சொல்லப் போனவர் அறிவில்லாதவர் என்ற பட்டத் தினை அவரால் பெற நேரிடும். அவ்வாறு உண்மையினைக் கண்டறிய முடியாத அப்புல்லறிவாளர் தன்னுடைய பிடிவாதமான புல்லறி வினால் தானே அனைத்தும் அறிந்திருக்கின்றோம் என்று முடிவு கட்டிவிடுவார். கல்லறிவு புகட்டச் சென்ற வரிடம் ஒன்றையுமே அவர் தெரிந்து கொள்ள விரும்ப மாட்டார். அவர் தான் தனக்குள் கொண்டிருப்பதையே உண்மை என்றும் கற்கருத்து என்றும் கொள்ளுவார். கண்டறியாததை எல்லாம் கண்டதாக நினைத்துப் பேசும் இயல்பு புல்லறிவாளரிடம் இருக்கும். கண்டா னாம் தான் கண்டவாறு என்று புல்லறிவாளர்களைக் குறிக்கும் ஒரு குறட்பா முடிகின்றது. புல்லறிவாளர்கள் கூட்டம் மக்களிடையே கிறைந்திருந்தால் நல்லறி வாளர்கள் நன்மையினைச் செய்யவும் முடியாமல் போய்விடும். - . காணாதான் காட்டுவான் தான் காணான் கானா தான் கண்டானாம் தான் கண்டவாறு' என்று வருகின்ற குறட்பா புல்லறிவாளர்களின் உள்ளப் போக்கினை அப்படியே எடுத்துக் காட்டுகின்றது. பற்பல கருத்துகளை உணர்ந்து மனித வாழ்க்கை யினைப் பண்பு பெற்ற வாழ்க்கையாக அமைத்தல் வேண்டும். அவ்வாறு நற்கருத்துகளை அறியும் வகை களில் கேள்விச் செல்வம் என்பதும் ஒன்றாகும். இது மிகவும் இன்றியமையாத கற்பண்பாகும் என்றே கொள்ளுதல் வேண்டும். பிறர் சொல்லுவதை நன்றாகக் கேட்டறிந்து கொள்ளுகின்ற பழக்கம் மிகச் சிறந்த தலைசிறந்த ஒன்றாகும். - ィ