பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 புல்லறிவாளர்கள் பிறரிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவர்களாவர். சொல்லுவதும் கேட்பதும் என்பது மனிதப் பிறவிக்கே உரிமையான பண்புகளில் ஒன்றாகும். மற்றவர்களுக்கு கற்கருத்துகளை நாம் சொல்லுகின்ற பழக்கம் இருத்தல் வேண்டும். அவ்வாறே மற்றவர்கள் சொல்லும் கருத்து களையும் நாம் கேட்டு உணர்ந்து அறிதல் வேண்டும்" எண்பொருளும் நுண்பொருளும் காம் பிறருக்குக் கூறுகின்றபொழுது அருமையான கருத்தைக் கூறினாலும் அதனை எளிமையாகக் கூறக் கற்றுக் கொள்ளவேண்டும். கேட்பவர்கள் புரிந்து கொள்வதற்கு அரிதானதாக இருக்கின்றதே என்று. எண்ணித் தயங்குதல் கூடாது. எளிமையாகவே சொல்ல நாம் பழகுதல் வேண்டும். - இதனை எண் பொருளவாகச் சொல்லுதல் என்று ஆசிரியர் வள்ளுவனார் குறிப்பிடுவார். மிகமிக அருமை யான, நுட்பமான கருத்துகளாக இருந்தாலும் அதனை எளிமையாக, இனிமையாக, நயமாக, எடுத்துக் கூறக் கேட்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். பேசுகின்ற கல்ல முறைகளில் இதுவும் ஒன்று. பிறருக்குச் சொல்லுதல் என்பதை விளக்கிக் கூறிய ஆசிரியர் பிறர் சொல்லுவதை எவ்வாறு கேட்டறிதல் வேண்டும் என்பதையும் விளக்கமாகக் கூறுகின்றார். மற்றவர்கள் பேசுகின்ற ப்ொழுது சில கருத்துகளை மயங்கும்படியும் கூறுவார்கள். அவர்கள் எந்த முறை .யில் கூறினாலும் அவர்கள் சொல்லியவற்றில் நுட்ப மான பொருள்களை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும் இதுதான் அறிவுடையவர்களின் செயலாகும்.